தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 april 2015

800 மில்லியன் புலிகள் கைகளுக்கு எவ்வாறு மாறியது: சுவாரசியமான தகவல் !

விடுதலைப் புலிகளுக்கு மகிந்த அரசாங்கம் பணம் கொடுத்ததாக நீண்ட நாட்களாக , ஒரு பேச்சு அடிபட்டு வருவது யாவரும் அறிந்த விடையமே. உண்மையில் என்ன நடந்தது என்ற உள்ளக தகவல் இதோ. அதிர்வின் வாசகர்களுக்காக தரப்படுகிறது.
2006ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தவேளை , அவரது அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட திணைக்களம் தான் ( "ராடா" )Reconstruction and Development Agency (RADA),. டிரான் அலஸ் அதன் முகாமையாளராக கடமையாற்றினார். சுணாமியால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்களுக்கு புது வீடுகளை அமைப்பதே இந்த ராடாவின் நிகழ்ச்சி நிரல் என்று கூறப்படுகிறது. திறைசேரியில் இருந்து சுமார் 803 மில்லியன் ரூபா , ராடா என்னும் திணைக்களத்தின் வங்கிக் கணக்கிற்குச் சென்றுள்ளது. வீடுகளை கட்டிக் கொடுக்கும் கம்பெனி என்று கூறப்படும் 2 கம்பெனிகள் போலியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. முதலாவது பி.எம்.கே ஹாலிடே ஹோம்ஸ், மற்றைய கம்பெனி எவரெஸ்ட் எஞ்சினியரிங்ஸ் ஆகும்.
இந்த இரண்டு போலிக் கம்பெனிகளுக்கு 100 மில்லியன் ரூபா காசோலையாக , சுமார் 8 தடவைகள் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த இரண்டு கம்பெனிகளில் இருந்து இந்தப் பணம் "ஓம்பஸ் ரெக்ஸ்டைல்ஸ்" என்னும் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது. “ஷாந்தி குமார்” மற்றும் “கஜன் குமார்” என்னும் இரண்டு சகோதரர்கள் இந்த ஓம்பஸ் ரெக்ஸ்டைலுக்கு முகாமையாளராக இருந்துள்ளார்கள். அதுபோக டிரான் அலஸ் என்னும் நபர் புலிகளின் நிர்வாகத்துறைப் பொறுப்பாலர் பூவண்ணனை சந்தித்தும் உள்ளார். ஓம்பஸ் நிறுவனத்திடம் சென்ற பணத்தை டிரான் அலஸ் , மற்றும் புலிகளின் முக்கியஸ்தர் எமில் காந்தன் ஆகியோர் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார்கள்.
ஆனால் அதற்குப் பின்னர் குறித்த 800 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலை காணப்படுகிறது. நேற்று முன் தினம்(10) டிரான் அலசை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சுமார் 2 மணி நேரமாக விசாரித்துள்ளார்கள். அவர் கூற்றின் படி , தான் பணத்தை எமில் காந்தனிடம் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் எமில் காந்தன் எங்கே என்பது எவருக்கும் தெரியாது. இது இவ்வாறு இருக்க ஷாந்தி குமார் , கஜன் குமார் , டிரான் அலஸ் என்று மொத்தமாக 9 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று மேலும் அறியப்படுகிறது. இவர்கள் அனைவரது பாஸ்போட்டுகளும் முடக்கப்பட்டு உள்ளது என்று கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
மகிந்த ராஜபக்ஷ புலிகளுக்கு பணத்தை கொடுத்தார் என்று , தற்போது சிங்களவர்கள் மத்தியில் பரப்புரை ஒன்றை மேற்கொள்ள ரணில் இந்த பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த 800 மில்லியன் ரூபாவும் இலங்கையை விட்டு வெளிநாடு ஒன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டதா என்ற சந்தேகங்கள் நிலவுகிறது. 
http://www.athirvu.com/newsdetail/2859.html

Geen opmerkingen:

Een reactie posten