வடக்கில் ஆபத்தான சூழல்: சர்வதேச நடவடிக்கை வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்
வடக்கில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாகவும், அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் எனும் தகவல் அறிய முடியாமல் இருக்கும் பாதகமான நிலைமை தொடர்பிலும் அரசை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போர் நிறைவு பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் வடக்கில் எத்தகைய ஆயுத மோதல்களும் அசம்பாவிதங்களும் இடம்பெறாத சூழலில் அமைதியை குலைத்து மக்கள் மத்தியில் மீண்டுமொரு அச்சமும் பதற்றமும் நிறைந்த சூழலை சமகாலத்தில் இந்த அரசு வலிந்து தோற்றுவித்துள்ளது.
வன்னியில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் அரச படைகளின் தீவிர சோதனை கெடுபிடிகள், சுற்றி வளைப்பு நடவடிக்கைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அமைதிக்கு பங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அரச படைகளின் திடீர் சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கைகளினால் இதுவரையில் 50க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் மீது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை அரசு கூறுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஏற்கனவே சிறைகளில் இருந்து நீதிமன்ற தீர்ப்புகளுக்கமையவே விடுதலையாகியிருந்தனர் என்பதும், அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறியவர்கள் என்பதும் கவனத்துக்குரியவை. மீண்டும் இவர்களை கைது செய்தல் என்பது அரசின் மீள் இணைப்பு சமுக மயப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.
தொடரும் கைது மற்றும் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் பாரிய அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. சிவில் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் இத்தகைய இராணுவ பலோத்கார அழுத்தங்களால் தமது அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை முன்னெடுப்பதில் மக்கள் பல்வேறு தாக்கங்களை சந்தித்துள்ளனர்.
அரச இந்த நடவடிக்கைகளிலிருந்து தம்மை தற்காத்துக்கொள்வதற்காக இளைஞர்களும் யுவதிகளும் தமது உயிரை பணயம் வைத்து ஆபத்தான கடல் வழிப்பயணங்கள் ஊடாகவோ, மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணங்கள் மூலமாகவோ நாட்டைவிட்டு பெயர்க்கப்படும் அல்லது நிரந்தரமாகவே துரத்தப்படும் தமிழர் இனப்பரம்பல் விகிதாசாரத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
பொது அமைதி வாழ்வுக்கு எவர் ஊறு செய்விக்கிறார்களோ, இன்னல் விளைவிக்கிறார்களோ அவர்கள் குற்றவாளிகளே. அந்தவகையில் மகிந்த ராஜபக்ஸ அரசு மிகப்பெரிய குற்றவாளி அரசாகும். சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மீண்டும் விடுதலைப் புலிகள் என்பதொரு மாயையை ஏற்படுத்தி, அப்பாவி இளைஞர்களினதும், குடும்பஸ்தர்களினதும் இயல்பு வாழ்க்கையை சிதைத்து மிக மோசமான மனித உரிமை மீறல்களில் இந்த அரசு ஈடுபட்டுவருகின்றது.
இத்தகைய அவலமான சூழலில் இருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்கும், எமது மக்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று சிவசக்தி ஆனந்தன் தனது அறிக்கையில் கோரியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65051.html
தென்னாபிரிக்கா பணமாகிறது TNA! சர்வதேச விசாரணைக்கு ஆபத்தில்லை சம்பந்தன் MP
இந்தக் குழுவினர், பிரிட்டோரியாவிலும், கேப்டவுனிலும் அடுத்த நான்கு நாட்கள் தங்கியிருந்து தென்னாபிரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளனர்.
குறிப்பாக, சிறிலங்கா விவகாரங்களைக் கையாள தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவினால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரதிநிதி, சிறிஸ் ரமபோசாவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
இதற்கிடையே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழத் தேசியக் கூடமைப்பின் இந்தப் பயணம், அதனைப் பலவீனப்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தகைய கருத்துகளை நிராகரித்துள்ளது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன், தமது தென்னாபிரிக்கப் பயணம், ஜெனிவா தீர்மானத்தைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள அனைத்துலக விசாரணையை எந்த வகையிலும் பாதிக்காது என்று தெரிவித்துள்ளார்.
“அனைத்துலக விசாரணைக்கும் இந்தப் பயணத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கொழும்பு வந்திருந்த தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இலங்கை அரசுடனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் பேசி தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முன்வந்திருந்தார்.
இதன் விளைவாக சிறிலங்கா அரச தரப்புக்குழுவொன்று தென்னாபிரிக்கா சென்று திரும்பியிருந்தது.
மார்ச் மாதம் நடந்த ஜெனிவா கூட்டத்தொடரின் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தென்னாபிரிக்கா சென்று பேச்சு நடத்துவதாக முன்கூட்டியே முடிவாகியிருந்தது.
அதற்கு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்திருந்த பின்னணியிலேயே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தென்னாபிரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
தேசிய பிரச்சினைக்கான அடிப்படை காரணங்கள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பான சகலவிதமான விடயங்கள் குறித்தும் இந்தப் பயணத்தின் போது பேச்சு நடத்தப்படும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65054.html
Geen opmerkingen:
Een reactie posten