அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தில் சில அமைப்புக்கள் முனைப்பு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆலோசகர் என்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடேல் பாலசிங்கம், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
அவர்களை இலங்கைக்கு அழைத்து, அவரை தூக்கிலிட வேண்டும் என்று, நியுசிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த சிங்கள பேரினவாத அமைப்புக்கள் கோரியுள்ளன.
இதன் மூலம் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பான சர்வதேசத்தின் பார்வையை திசை திருப்ப முடியும் என்று அந்த அமைப்புகள் ஆலோசனை வழங்கி இருக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/64913.html
இலங்கையின் இறுதிப் போரில் உதவிய இந்திய அதிகாரிகளுக்கு வழக்கு..
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
இலங்கையில் கடந்த 2008 மற்றும் 2009–ம் ஆண்டுகளில் தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீது அந்நாட்டு அரசு மிகவும் கொடுமையான இன ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டது. இந்த கொடுமையான சம்பவத்தில் இலங்கை ராணுவத்தினரால் சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். தமிழர்கள் தங்கள் வீடுளை, குடும்பங்களை இழந்து பல நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. செயலாளர் நியமித்த சர்வதேச நிபுணர் குழுவின் அறிக்கையில், இலங்கையின் குடிமக்களுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்திய ராணுவமும் ஒத்துழைப்பு நல்கியது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இலங்கைக்கு உதவியாக இந்திய ராணுவம் பயன்படுத்தப்பட்டதை, இந்திய தூதர் 9–9–2008 அன்று பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். இவ்வாறு இந்திய அரசின் ரகசியமான ஒத்துழைப்புடன் இனஒழிப்பு செயல்களில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 53 (2)–ன் படி, இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக அந்நிய நாட்டின் மீது படையெடுப்பதற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறவேண்டும்.
ஏனென்றால் குடியரசுத்தலைவர் இந்திய ராணுவத்தின் தலைவரும் ஆவார். அதேபோல, இந்தியாவின் பாதுகாப்பு தவிர வேறு எந்தப்பணிக்கும் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி இந்திய ராணுவத்தை பயன்படுத்த முடியாது. ஆனால் இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளில் உதவி புரிவதற்கு பாராளுமன்ற ஒப்புதலை இந்திய ராணுவம் பெறவில்லை. எனவே இந்திய ராணுவத்தின் இந்த செயல் சட்டவிரோதமானது.எனவே, இந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, இந்திய ராணுவத்தின் சட்டமீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டும். மேலும் சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்ட அதிகாரிகளுக்கு சட்டத்தின் அடிப்படையில் உரிய தண்டனைகள் வழங்கப்படவேண்டும். இந்தப்போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும்.
http://www.jvpnews.com/srilanka/64922.html
Geen opmerkingen:
Een reactie posten