தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

இலங்கை தமிழர்களுக்கான உதவி தொடரும்!- சோனியா காந்தி!!kolvathiththaane!!!

இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து உதவி செய்யும் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் இன்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என மற்ற அரசியல் கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன.
ஆனால், இலங்கை தமிழர் நலனுக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இரத்தம் சிந்தினார்.
காங்கிரஸை விட எந்த கட்சியாவது இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது செய்துள்ளது என்று கூற முடியுமா? இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் தொடர்ந்து உதவிகள் செய்யும்.
அதேவேளை பாரதீய ஜனதா கட்சி ஒரு தனி நபர் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
மதத்தின் பெயரால் பாஜக மக்களை பிரிக்க நினைக்கிறது. எனவே நரேந்திர மோடி கைகளில் இந்திய தேசம் சென்று விடக்கூடாது.
தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்படவில்லை. மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சியின் பக்கம் இருக்கிறது.
மக்களிடம் இருந்து காங்கிரஸ் கட்சியை ஒரு போதும் பிரிக்க முடியாது என சோனியா கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXksy.html

Geen opmerkingen:

Een reactie posten