தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

பிரான்ஸ் நாட்டில் உள்ள புலிகள் உறுப்பினர்களை பிடிக்கவேண்டும்: இன்ரர் போல் !

அடுத்த அதிரடி: கோபியின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்: பேசிவர்கள் நிலை ?
16 April, 2014 by admin
தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என இலங்கை அரசால், அடையாளப்படுத்தப்பட்ட கோபியின் தொலைபேசி விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதனை தாம் கண்டுபிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. அண்மையில் நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கோபி உள்ளிட்ட மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்று இலங்கை புலனாய்வு தெரிவித்திருந்தது யாவரும் அறிந்ததே. எனினும் கோபி தொடர்பான விசாரணைகள் இன்னமும் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை.

தற்போது கோபியின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கொல்லப்பட்ட ஏனைய இரண்டு முன்னாள் புலி உறுப்பினர்களினதும் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டதன் பின்னர் விசாரணைகள் நடத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கோபியுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் சில நேரங்களில் கைது செய்யப்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோபியுடன் நீங்கள் பேசினீர்கள் என்று சொல்லி மேலும் எத்தனை பேரை, இலங்கை அரசு கைதுசெய்ய இருக்கிறதோ தெரியவில்லை. அதில் இலங்கை அரசு தனக்கு வேண்டாத புலம்பெயர் தமிழர்களையும் இலகுவாக இணைக்க முடியும். இந்த மூவரின் கதை இவ்வாறு நீண்டு செல்கிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6685

பிரான்ஸ் நாட்டில் உள்ள புலிகள் உறுப்பினர்களை பிடிக்கவேண்டும்: இன்ரர் போல் !
16 April, 2014 by admin
பிரான்ஸ் நாட்டில் உள்ள புலிகள் உறுப்பினர்களையும் சில தலைவர்களையும் கைதுசெய்து இலங்கை அனுப்புமாறு, பாதுகாப்பு பிரிவினர் இன்ரர் போல் பொலிசாரிடம் புதுக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக அறியப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் பிரான்சில் செயல்பாட்டாளர் பரிதி அவர்கள் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு இதுவரை முடிந்தபாடாக இல்லை. அத்தோடு குற்றவாளிகளையும் பிரெஞ்சுப் பொலிசார் இதுவரை கண்டுபிடிக்கவும் இல்லை. பிரான்சில் வாழும் தமிழர்களிடையே துப்பாக்கி கலாச்சாரம் ஓங்கியுள்ளதாகவும், முன் நாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரே அல்ஜீரியா நாட்டுக்குச் சென்று , கைத்துப்பாக்கிகளை வாங்கிக்கொண்டு பிரான்சுக்குள் நுளைவதாகவும் இலங்கை ஒரு அறிக்கை ஒன்றை தயாரித்து சர்வதேச பொலிசாரிடம் கையளித்துள்ளது என கொழும்பில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

புலம்பெயர் நாடுகளில் , கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் அதிகம் அரசியல் காய்நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஸ்ரீலங்கா அரசுக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்தவே தற்போது இன்ரர் போல் என்னும் சர்வதேச பொலிசாரை ஏவி தமிழர்களை அடக்க நினைக்கிறது இலங்கை அரசு. இருப்பினும் இன்ரர் போல் பொலிசார், இந்த அறிக்கையை எவ்வளவு தூரம் கவனத்தில் கொள்வார்கள் என்பதில் சில சந்தேகங்கள் நிலவுகிறது. ஏற்கனவே 2012ம் ஆண்டு இன்ரர் போல் பொலிசார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கை போன்ற நாடுகள் தமது அரசியல் எதிரியை பழிவாங்க சர்வதேச பொலிசாரை பயன்படுத்துவதாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இலங்கை அரசு தற்சமயம் பலருக்கு, சர்வதேச பொலிசார் ஊடாக பிடியாணைகளை பிறப்பித்துள்ளது. இருப்பினும் அவர்களை சர்வதேசப் பொலிசார் தீவிரமாக தேடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6684

Geen opmerkingen:

Een reactie posten