தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 april 2014

புலிகள் இருக்கின்றனர் CID கூட்டத்தில்: கோத்தபாய

சிறுவர்கள் சுட்டதை பார்த்த அனந்தி! இராணுவ பாதுகாப்புத் தேடியது ஏன்?

வடக்கில் வாழும் பெற்றோர்களிடம் புலிகளினால் கடத்தப்பட்ட சிறுவர்களின் கதி குறித்து அனந்தி எப்போதாவது பேசியதுண்டா ? கடத்தப்பட்ட கணவர்மார் பற்றி அவர்களது மனைவியரிடம் அனந்தி பேசியதுண்டா? இதற்கும் ஒரு சர்வதேச விசாரணை தேவையென்று அனந்தி ஏன் கோரவில்லை.? இவர் உண்மையில் தமிழ் சமூகத்திற்காக குரல் கொடுக்கின்றாரா என்று யோசித்துப் பாருங்கள் என்றும் அந்த துண்டுபிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொன்றது அனந்திக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட சிறுவர் சிறுமியர் இன்று எங்கே உள்ளனர் ? இதற்கு சர்வதேச விசாரணை தேவையில்லையா ? தனது குழந்தைகளுக்குத் தேவையான பாலுணவைப் பெற்றுக் கொள்ள இராணுவப் பாதுகாப்பு வலயத்திற்குச்
வடமாகாண சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அனந்தி சசிதரனின் சுயரூபம் உங்களுக்கு தெரியுமா? என்ற தலைப்பில் கிழக்கில் சில இடங்களில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
வட தமிழ் அமைப்பினரால் உரிமை கோரப்பட்டுள்ள அந்த துண்டுபிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருகோணமலை மாவட்ட எல்.ரீ.ரீ.ஈ அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவிதான் அனந்தி. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தலைமை லிகிதராகக் கடமையாற்றிய இவர் தற்போது அரசியலுக்குள் புகுந்து குறுகிய காலத்திற்குள் சர்வதேசத்தைத் தன்பக்கம் திருப்புவதற்காக புலிகள் வலையப்பின் திட்டத்திற்கு அமைவாக செயற்படுவதை நீங்கள் அறிவீர்களா ?
இவர் வெளிநாட்டு புலி ஆதரவு அமைப்புக்கள், சில புலம்பெயர் தமிழ்க் குழுக்கள், மீண்டும் புலிகள் தலையெடுப்பதற்கு உதவும் அமைப்புக்கள், மற்றும் மறைந்து வாழும் புலித் தலைவர்களின் உதவியோடு கூட்டமைப்பு சார்பாக வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதை நீங்கள் அறிவீர்களா ?
இவர் அரசியல் பலத்தைப் பெற்றவுடன் தமிழ்க் கலாசாரத்திற்கு ஒவ்வாத டெனிம் மற்றும் ரீ சேர்ட் அணிந்து கொண்டு புலிகளின் தேவைக்காக கனடா, ஜேர்மன், டென்மார்க், நோர்வே மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் சுற்றுவதை நீங்கள் அறிவீர்களா ?
அங்கு செல்லும் போதெல்லாம் அவர் புலிகள் அமைப்பைச் சந்தித்துள்ளார். இவ்வமைப்புக்களுக்கு முறையான தலைமைத்துவம் இல்லையென்பதினால் தனது ஆதரவுடன் மறுபடியும் புலிகளின் அரசியல் அபிலாஷைகளை சர்வதேச அரங்கில் கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்.
இந்த நோக்கத்திற்காக சட்டவிரோதமாகவும் மற்றும் கப்பம் மூலமும் புலிகளினால் சேர்க்கப்பட்டு இன்று வரை பகிரங்கப்படுத்தப் படாமல் இருக்கும் பணம் அனந்திக்குக் கொடுக்கப்படுகின்றது. அனந்தி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தலைமை லிகிதராகக் கடமையாற்றியபோது இவர் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்கு அங்குள்ள அரச அலுவலர்கள் பற்றிய தகவல்களை வழங்கியது உங்களுக்குத் தெரியுமா?
இறுதி யுத்ததத்தின் போது இரட்டை வாய்க்காலில் நின்ற பொதுமக்களிடம் இராணுவப் பாதுகாப்புப் பிரதேசத்திற்கு அனுப்புவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்ட இவருடைய கணவர் அப்பணத்தை அனந்திக்குக் கொடுத்து அனந்தி உட்பட பிள்ளைகள் மூவருடன் மேலும் ஆறு பேரைச் சேர்த்து டொல்பின் வானில் ஏற்றி ராணுவத்திட்ம் சரணடைவதற்காக அனுப்பி வைத்ததை நீங்கள் அறிவீர்களா ?
புலிகள் அமைப்பில் சிறுவர்களை கட்டாயமாகப் போரில் சேர்த்துக் கொள்ளும் பகுதிக்குப் பொறுப்பாக அனந்தியின் கணவர் எழிலன் இருந்தார்.
வலைஞர் மடம் செபமாலை மாதா ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த 300 இற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியரைக் கடத்திச் சென்றது இவரது கணவர் எழிலன்தானே !
அவ்வேளை செல்ல மறுத்த சிறுவர்கள் 4 பேரை அவ்விடத்திலேயே துடிதுடிக்க சுட்டுக் கொன்றது அனந்திக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட சிறுவர் சிறுமியர் இன்று எங்கே உள்ளனர் ? இதற்கு சர்வதேச விசாரணை தேவையில்லையா ? தனது குழந்தைகளுக்குத் தேவையான பாலுணவைப் பெற்றுக் கொள்ள இராணுவப் பாதுகாப்பு வலயத்திற்குச் செல்ல அனுமதி கேட்ட இரு குழந்தைகளின் தாயை குழந்தைகளின் கண்முன்னாலேயே தனது பிஸ்டலினால் தாயின் தலையில் சுட்டதை நீங்கள் அறிவீர்களா?
எனவே தனது கணவரின் குரூர செயற்பாடுகளைப் பற்றி அனந்தி அறிந்திருக்கவில்லையா ?

புலிகள் இருக்கின்றனர் CID கூட்டத்தில்: கோத்தபாய

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற புலனாய்வுப் பிரிவுகளின் மீளாய்வுக் கூட்டத்தில் முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அதிரடிப்படை அதிகாரிகள் என உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அத்துடன் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரின் பாதுகாப்பு பிரிவுகளை ஒன்றிணைத்து ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய புலனாய்வுப் பிரிவினான உயர் புலனாய்வுப் பிரிவு அழைக்கப்படும் பிரிவின் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டம் ஆரம்பிக்கும் முன்னர் அதாவது, கோத்தபாய ராஜபக்ஷ கூட்டத்திற்கு வருதற்கு முன்னர், மேற்படி உயர் பாதுகாப்பு பிரிவினர் சிகப்பு நிற முத்திரை பதிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விநியோகித்தனர்.
அதில் சில முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
பதுளை, ஹட்டன், நோர்வூட் தோட்டங்களில் விடுதலைப் புலிகள் புதிதாக உறுப்பினர்களை சேர்த்து மிகவும் ரகசியமான முறையில் ஒன்றிணைந்து வருகின்றனர்.
விடுதலை செய்யப்பட்ட மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் பதுளை ஸ்பிரிங்வெளி தோட்டத்தில் இளைஞர்களை இயக்கத்தில் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான, அபாயமான நிலைமை ஏற்படும் எனவும் அந்த ஆவணத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த மிகவும் ரகசியமான தகவல்கள் என்ற இந்த ஆவணம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆவணம் விநியோகிக்கப்பட்ட பின்னர், கூட்டத்தில் வந்த பாதுகாப்புச் செயலாளர், ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து பேசியதுடன் புலனாய்வுப் பிரிவுகளின் சகல பணிப்பாளர்களும் இந்த விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதேவேளை கூட்டத்தில் பேசிய பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோன், பதுளையில் பொலிஸார் இரவு பகலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதாகவும் பாதுகாப்பு ரோந்து பணிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் பதுளையில் இப்படியான ஆபத்தான நிலைமை இருப்பது பற்றிய தகவல்கள் தமக்கு கிடைக்க வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் இவ்வாறு கூறியதை அடுத்து, கடும் கோபமுற்ற பாதுகாப்புச் செயலாளர், தனக்கு அது பற்றிய காரணங்களை அறிந்து கொள்ளும் தேவையில்லை எனவும் தான் வழங்கிய அறிக்கை பின்பற்றுமாறும் கூறியுள்ளார்.
பொலிஸார் அலுவலகத்தில் இருந்து தகவல்களை திரட்டுவது போல் இராணுவத்தினர் தகவல்களை திரட்டுவதில்லை. அவர்கள் களத்தில் இறங்கி தகவல்களை திரட்டுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய கோத்தபாய, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளனர். அவர்கள் எமது துன்ப துயரங்களை அறிய வரப் போவதில்லை. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு ஒக்சிஜன் கொடுக்கவே அவர்கள் வருகின்றனர்.
இதனால் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கும் தகவல்களை பின்பற்றி செயற்படுங்கள். இன்னும் இரண்டு வாரங்களில் பதுளை நிலைமைகளை சாட்சியங்களுடன் அறிந்து கொள்ள முடியும் எனவும் கோத்தபாய கூறியுள்ளார். எவ்வாறாயினும் புலனாய்வுப் பிரிவுகளின் மீளாய்வுக் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்ட ரகசியமான புலனாய்வுத் தகவல்கள் எவ்வாறு திரட்டப்பட்டன என்ற விபரங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை எனவும் அந்த கூறியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten