[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 02:10.22 PM GMT ]
அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்,
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை உலகநாடுகளுக்கு தெரிவித்து நியாயத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும், ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பழிவாங்கும் செயற்பாடாகவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை காணக்கூடியதாக உள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அண்மையில், புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வந்து முதலீடு மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தமை முக்கியமான ஒரு விடயம்.
இதற்கு மேலதிகமாக அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருக்கின்ற கே. பி, புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற பலரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான வேளையில் அரசாங்கத்தின் இத்தடைச் செயற்பாடு அரசாங்கத்திற்கு இருக்கும் சமாதானத்தின் மீதான கரிசனையின்மையை மிகத் தெளிவாகக் காட்டுவதாக அமைந்துள்ளது.
தொடர்ந்து திருக்கேதீஸ்வரத்தில் மயானம் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரியொருவர் கூறியுள்ளார். அங்கு மயானம் இருந்தமைக்கான ஆதாரம் எதுவும் இல்லை.
மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுமே தவிர புதைக்கப்படமாட்டாது. திருக்கேதீஸ்வர கோவிலுடன் தொடர்புடையவர்கள் மயானமில்லையெனக் கூறியுள்ளனர். அப்புதைகுழியிலிருந்து 82 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட 25 சதக் குற்றி கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே இப்புதைக்குழி 82ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதிக்குரியது. இப்பகுதி பெரும்பாலும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளது. அதற்கு முன்னர் அங்கு இருந்த மக்களும், திருக்கேதீஸ்வர கோவில் சமூகத்தினரும் அப்பகுதியில் மயானம் இருக்கவில்லையெனக் கூறியுள்ளனர்.
எனவே இப்புதைகுழி தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட நாணயக்குற்றியிலிருந்து அரசாங்கம் விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.
அதைவிடுத்து உண்மையை மூடி மறைக்க புதைகுழியை மயானமெனக் கூறுவதை ஏற்கமுடியாது. எனவே புதைகுழி தொடர்பான உண்மை வெளிக்கொணரப்பட வேண்டுமெனக் கோருகின்றேன். இதுபோன்ற செயற்பாடே நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்தும்.
கிருசாந்தி கொலை வழக்கின் மூலம் செம்மணி புதைகுழி விவகாரம் வெளிவந்தது. அக்கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளியான ராஜபக்ஷ தான் உண்மைகளை கூறப்போவதாக அப்போது கூறியிருந்தார்.
தற்போது அக்குற்றவாளி எங்கு இருக்கிறார் என்று தெரியாது. முன்னர் செம்மணி புதைகுழியையும் அரசாங்கம் மறுத்தது. பின் உண்மை வெளி வந்தது. இந்நிலையில் திருக்கேதீஸ்வர புதைகுழி விவகாரத்தையும் அரசாங்கம் மறுக்கின்றது.
மேலும், புலிகள் இல்லாத இந்த நேரத்தில் விதுஷிகா மற்றும் அவரது தாயின் கைதைத் தொடர்ந்து குடும்பங்கள் கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள் மூலம் வடகிழக்கில் இராணுவ உச்ச நிலையை பறைசாற்றிக் காட்டுகின்றது.
இந்தநிலையை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் பூகோள வரைபடத்தின் இலங்கையின் அமைவிடம் என்பது மாற்றியமைக்கப்பட வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnx4.html
பொய்யான புலித் தலைவர்களை உருவாக்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு
[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 08:40.18 AM GMT ]
எந்த காரணங்களையும் வெளியிடாது ராஜபக்ஷ அரசாங்கம் விடுதலைப் புலிகள் என்ற கதை இட்டுக்கட்டி வெளிநாடுகளில் இயங்கம் தமிழ் சிவில் அமைப்புகளை தடை செய்துள்ளது.
நாட்டில் இருக்க முடியாது உயிரை காப்பற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற தமிழ் மக்கள், நாட்டில் இல்லாத விடுதலைப் புலிகளுக்கு உதவி வருவதாக அரசாங்கம் பாரிய கோஷங்களை எழுப்பி வருகிறது.
எனினும் போருக்கு பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பணத்தை பெற்றுக்கொண்டு விடுதலை செய்துள்ளனர்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இன்றைய பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா நிமால் வாகிஸ்ட மற்றும் அந்த பிரிவின் பொறுப்பதிகாரி பிரசன்ன டி அல்விஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் பணத்தை பெற்று அவர்களை விடுதலை செய்துள்ளதாக குறித்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
போரின் பின்னர் சல்லடை போட்டு அடையாளம் காணப்பட்ட நூற்றுக்கணக்கான விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவு நான்கு விசாரணைப் பிரிவுகளை ஏற்படுத்தியது.
முதலாவது விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பாக ஹரிந்த ஜயகாந்தவும் இரண்டாம் பிரிவுக்கு ஆப்தீனும், மூன்றாவது பிரிவுக்கு சமன் கருணாரத்னவும் நான்காம் பிரிவுக்கு பண்டாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பொலிஸ் பரிசோதகர்களுக்கு பொறுப்பாக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன டி அல்விஸ் செயற்பட்டு வந்தார். அவர் நீதவான் ஜயக்கி அல்விஸின் சகோதரர்.
பணத்தை பெற்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்வதற்காக வாகிஸ்ட மற்றும் பிரசன்ன டி அல்விஸ் ஆகியோருக்கு மூன்றாவது விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த சமன் கருணாரத்னவே உதவியுள்ளார்.
விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கான பணப் பேரம் பேசல்களை முடிவடைந்த பின்னர், சந்தேக நபரை பார்வையிட வரும் உறவினர் ஊடாக பணத்தை இரகசியமான கணக்குகளில் வைப்புச் செய்த பின்னர், சந்தேக நபர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை எனக் கூறி விடுதலை செய்துள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் தலா 10 முதல் 15 லட்சம் ரூபா வரை பெறப்பட்டுள்ளதுடன் வாகிஸ்ட, பிரசன்ன அல்விஸ் மற்றும் சமன் கருணாரத்ன ஆகியோர் இந்த பணத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஏனைய பொலிஸ் அதிகாரிகள் இதனை அறிந்திருந்த போதிலும் அதில் தம்மை சம்பந்தப்படுத்திக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
சந்திரா வாகிஸ்ட பெற்றுக்கொண்ட கோடிக்கணக்கான பணத்தில் ஒரு பகுதியை செலவிட்டு காலி பிரதேசத்தில் ட்ரகன் பழத் தோட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த பழத் தோட்டைத்திற்கு பொறுப்பாக பூஸா முகாமில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான லால் கமகே என்பவர் பணியாற்றி வருவதுடன் தோட்ட வேலைகளில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரசன்ன டி அல்விஸ் தற்போது உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன் சமன் கருணாரத்ன பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
இந்த நிலையில், வாகிஸ்ட ஆலோசனையின் பேரில், விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி எனக் கூறும் கதை திரைக்கதையை எழுதியவர்கள் பிரசன்ன டி அல்விஸ் மற்றும் சமன் கருணாரத்ன ஆகியோர் என அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
பல மில்லியன் பணத்தை பெற்று விடுதலை செய்யப்பட்ட உண்மையான விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு சென்று விட்ட நிலையில், லஞ்சம் வாங்கிய சந்திரா வாகிஸ்ட, பிரசன்ன டி அல்விஸ், சமன் கருணாரத்ன ஆகியோர் ராஜபக்ஷவினருக்கு தேவையான வகையில் பொய்யான புலித் தலைவர்களை நாட்டில் உருவாக்கி வருகின்றனர் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.
புலிக்கதை கூறி மக்களை ஏமாற்றும் அரசாங்கம் - சிங்கள ஊடகம்
ராஜபக்ஷ அரசாங்கம் இல்லாத விடுதலைப் புலிகளை இருப்பதாக உருவாக்கி மக்களை ஏமாற்றி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் ராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என யோசனை நிறைவேற்றப்பட்டது.
இந்த யோசனை நிறைவேற்றப்பட்டதும், ராஜபக்ஷ அரசாங்கம், புதிதாக விடுதலைப் புலிகள் என்ற கதையை உருவாக்கி ஜெனிவா மனித உரிமை பேரவை புலிகளுக்கு உதவி செய்வதாக பிரசாரம் செய்து நாட்டு மக்களை ஏமாற்றும் பாரிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இதனடிப்படையில் 16 தமிழ் அமைப்புகளும் 424 நபர்களும் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வதாக கூறி தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்காத நிலையில், வெளிநாட்டில் உள்ளவர்கள் யாருக்கு உதவி செய்வார்கள் என்ற கேள்வி எழும் என்பதால், ராஜபக்ஷவின் நாட்டில் விடுதலைப் புலிகளை உருவாக்கி வருகின்றனர்.
இந்த திட்டத்திற்கு அமைய விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் ஒருவர் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கே.பி.என்ற குமரன் பத்மநாதன் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்பட்டது.
எனினும் அரசாங்கத்துடன், ஏற்படுத்திக் கொண்ட இணக்கத்தின் அடிப்படையில் அவர் இலங்கை வந்ததாக பின்னர் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ள புலிகளின் பிரதித் தலைவர் கூறியதாக தெரிவித்து, ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு சென்று தகவல் வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் நாடு திரும்பியதும் பயங்கரவாதத்திற்கு உதவினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்படவிருப்பதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETdLXnr5.html
Geen opmerkingen:
Een reactie posten