தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 7 april 2014

ஒரு பக்கம் பிரேரணை - மறுபக்கம் ஆசி - அடேங்கப்பா அமெரிக்கா !




தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுவார்கள் சிலர். அது இதுதானோ என்று எண்ணத் தோன்றும். சில நாட்களுக்கு முன்னர் தான், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை ஒன்றை ஜெனீவாவில் கொண்டுவந்தது. அது நல்லது .... இல்லை இல்லை ஒன்றுக்கும் உதவாதது என்று தமிழர்கள் சிலர் இரண்டாகப் பிரிந்து அடிபட்டுக்கொண்டார்கள். சூடாவ வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது. ஆனால் அது நடைபெற்று சில நாட்களில் எல்லாம், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்குச் சென்று, மல்வத்துபீட மகாநாயக்க திப்பட்டுவாவே சிறி சுமங்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார். நாசூக்காக மற்றும் ஓசைபடாமல் இந்த வேலையை செய்து முடித்துள்ளார் அமெரிக்க தூதுவர் மிஷெல் சிசேன்.

கடந்த 3 தினங்களுக்கு முன்னர்(04.04.2014) அன்று, அமெரிக்க தூதுவர் மிஷெல் சிசேன் தலதா மாளிகை சென்று அமெரிக்க தீர்மானத்தை தேரருக்கு காட்டியுள்ளார். அங்கே என்ன பேச்சுவார்த்தை நடந்திருக்கும் என்பதனைப் பற்றி நாம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அதாவது அமெரிக்க தீர்மானத்தில் ஒன்றுமே இல்லை. இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானம் அதில் எதுவும் இல்லை என்பதனை சிசேன் விளங்கப்படுத்தி இருக்கிறார். இதனையடுத்து திப்பட்டுவாவே சிறி சுமங்க தேரர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இலங்கை குறித்து வெளிநாடுகளுக்கு தவறான தகவல் சென்றடைவதாகவும் சில மத அடிப்படை வாதிகளே இலங்கையில் அநாவசிய செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் மல்வத்துபீட மகாநாயக்கதேரர் இதன்போது தெரிவித்துள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

பின்னர் தேரரிடம் ஆசிர்வாதம் பெற்று சிசேன் கொழும்புக்கு திரும்பியுள்ளார். உலகத்தை ஏமாற்ற இலங்கைக்கு எதிராக பிரேரணை. பின்னர் அதனை தாஜாசெய்ய சிங்கள தேரரை சந்தித்து அதில் ஒன்றும் பாரதூரமாக இல்லை என்று சொல்லி அமைத்திப்படுத்தியும் உள்ளார்கள். இதனை நம்பி சில தமிழர்கள் அமெரிக்க தீர்மானம் தமிழர்களுக்கு ஒரு விடிவைக் கொண்டுவரும் என்று எண்ணுகிறார்கள். இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் மற்றும் ஒரு கோஷ்டி , அமெரிக்க தீர்மானம் சரி என்று கூறி மக்களை மேலும் குழப்பி வருகிறது. ஆனால் ஒரு நாடு எமக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் என்று நாம் நம்பி இருப்பது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதனை நாம் இனியாவது புரிந்துகொள்ளவேண்டும்.


http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6642

Geen opmerkingen:

Een reactie posten