தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி சமூகத்திற்கு சொல்லும் செய்தி என்ன: ஐ.தே.க கேள்வி!

மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்துக்கு தமிழ் அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 12:41.45 PM GMT ]
மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தில் காணப்பட்ட அடெக் ஊழியர்கள் வெற்றிடத்துக்கு தகுதியான பலர் விண்ணப்பத்துள்ளபோதிலும் அது கருத்திற்கொள்ளப்படாமல் பெரும்பான்மையினத்தினை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனை நிறுத்தி ஏற்கனவே விண்ணப்பித்தவர்களை அவர்களின் தகைமையினைக்கொண்டு நியமிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற நீர்ப்பாசனத்துறை தொடர்பிலான ஆலோசனைக் கூட்டத்திலேயே இந்த கோரிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர் விடுத்தார்.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
நீர்ப்பாசன திணைக்களத்தில் 79 பேர் பல்வேறு துறைகளில் பல வருடகாலமாக அடெக் ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றனர். இவர்கள் தற்காலிகமாகவே கடமையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த ஊழியர்களுக்கான நியமனத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றும் தகைமையுள்ளவர்களும் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் உள்ளீர்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக வேறு மாவட்டங்களில் இருந்து பெரும்பான்மையினத்தினை சேர்ந்தவர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தில் கடமையாற்றும் அடெக் ஊழியர்கள் உயர்தரத்தில் சித்திபெற்றவர்கள்.அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அதற்கு பதிலாக பத்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மையினத்தினை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டமை பெரும் அநீயாயம் என்பதை அமைச்சரிடம் சுட்டிக்காட்டினேன்.
இதன்போது அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா, தகுதியுள்ளவர்களை இணைத்துக் கொள்வதற்கு தேவையான அமைச்சரவை பத்திரங்களை தயாரிக்குமாறு நீர்ப்பாசனத்துறை பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றும் தகுதியானவர்கள் தொடர்பிலான பட்டியலை வழங்குமாறும் அமைச்சர் கோரினார்.
எனினும் ஏற்கனவே இது தொடர்பான பட்டியல் நீர்ப்பாசனத்துறை பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளதையும் மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதையும் சுட்டிக்காட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXks3.html

குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி சமூகத்திற்கு சொல்லும் செய்தி என்ன: ஐ.தே.க கேள்வி
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 12:50.45 PM GMT ]
பிரபல சிங்களப் பாடகர்களான ரூகாந்த குணதிலக்க, சந்திரலேக்கா தம்பதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவித்தன் மூலம் சமூகத்திற்கு வழங்கிய செய்தி என்னவென ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் புத்தாண்டு முன்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இது குறித்து கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா,
ரூகாந்த, சந்திரலேக்கா தம்பதியினருக்கு இடையூறுகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு சொந்தமான பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக பாணந்துறை மேல் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தற்போது எந்த பிரச்சினைகளும் இன்றி வெளியில் வந்துள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 34 வது பிரிவுக்கு அமைய ஜனாதிபதி வரும்பினால் முழுமையான விடுதலையோ, நிபந்தனை அடிப்படையிலான பொது மன்னிப்பை வழங்க முடியும். ஆனால் இந்த குற்றவாளிகளுக்கு முழுமையான மன்னிப்பு வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பல வருடங்களாக விசாரிக்கப்பட்ட வழக்கொன்றில் தண்டனை வழங்கப்பட்டவர்களை மன்னிப்பு வழங்கிய விடுதலை செய்ததன் மூலம் சட்டம் குறித்து நாட்டு மக்களுக்கு வழங்கும் செய்தி என்ன?.
அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவின் வைப்பாட்டி மற்றும் அவரது பணிப் பெண்ணை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட அமைச்சரின் மனைவி, கொலை குற்றம் சுமத்தப்பட்ட இரத்தினபுரி சமன் ஆலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமே ஆகியோரும் இவ்வாறு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டனர் எனவும் அஜித் பீ. பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXks4.html

Geen opmerkingen:

Een reactie posten