ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவளிக்காமல் இந்தியா நழுவிக் கொண்டமையை மனித உரிமைகளுக்காகக் குரல் எழுப்பி வரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியப் பிரிவு கடுமையாகச் சாடியிருக்கின்றது.
இந்தியா, மனித உரிமைகள் தொடர்பான தனது பொறுப்புக்களைக் கைவிட்டிருக்கின்றது. ஜனநாயக எழுச்சியை அது பின்தள்ளியிருக்கின்றது.
இலங்கை மக்களின் மனித உரிமைகளுக்கு மேலாக இந்தியா - தனது 'தேசிய நலன்' என்ற - குறுகிய கோட்பாட்டை முன்னிறுத்தியிருப்பது வெட்கக் கோடானது." - என்று மன்னிப்புச் சபையின் இந்திய நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் சசி குமார் வேலத் கூறியிருக்கின்றார்.
சீக்கிய அமைப்பான 'டால் கலாஷா' என்ற நிறுவகமும் இலங்கையில் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகரமான, சுயாதீனமான, சர்வதேசப் பொறிமுறைக்கு வழிசெய்யும் - அமெரிக்க ஆதரவுடனான - ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்காமைக்காக இந்தியாவைக் கடுமையாகச் சாடியிருக்கின்றது.
இந்தப் பிரேரணை தொடர்பான இந்தியாவின் எதிர்வினையை தன்னுடைய நாட்டில் இன சிறுபான்மையினரான சீக்கியர்கள், காஷ்மிரிகள் விடயத்தில் அது வெளிப்படுத்தி வரும் முழுமையான அடிப்படை உரிமை மீறல் போக்கின் பின்புலத்தில்தான் நோக்க வேண்டும்" - என்கின்றார் அந்த நிறுவகத்தின் தலைவர் எச்.எஸ்.டாமி.
இந்தப் பிரேரணை மீதான இந்தியாவின் மௌனம் புதியதன்று. இத்தகைய தொடர் விடயங்களில் இந்தியா இரட்டை வேடப் போக்கையே வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. பல தடவைகள் குத்துக்கரணமும் அடித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyETYLWfo1.html
Geen opmerkingen:
Een reactie posten