தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 april 2014

இலங்கை கடற்படையின் செயலுக்கு மௌனமான அரவிந்த் கெஜ்ரிவால்

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 9ம் திகதி 282 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் இந்திய – இலங்கை எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
மூன்று ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள், ராமேஸ்வரத்திற்கு படகை திருப்பினர்.
ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள், புவனேந்திரன் என்பவரது படகை மடக்கி பிடித்து, சரமாரியாக கல் வீசி தாக்கினர். கப்பலால் மோதி, விசைப்படகை உடைத்து, சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர், படகில் இருந்தவர்களை, பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக தாக்கினர்.
இதில், டிரைவர் ராஜ் காயமடைந்தார். படகில் இருந்த வலையை வெட்டி, கடலில் மூழ்கடித்தும், திசை காட்டும் ஜி.பி.எஸ்., கருவி, மொபைல் போன்களை பறித்தும், மீனவர்களை விரட்டியடித்தனர்.
படுகாயமடைந்த மீனவர் ராஜ், ராமேஸ்வரம் அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார்.
http://www.jvpnews.com/srilanka/65308.html

இலங்கை கடற்படையின் செயலுக்கு மௌனமான அரவிந்த் கெஜ்ரிவால்

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கட்சி தனது விஞ்ஞாபனத்தை வெளியிட்ட ஒரு சில நிமிடங்களின் பின்னர் தமிழக மீனவர்கள் என்பதை நன்கு அறிந்திருந்த நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்ததை ஆம் ஆத்மி கட்சி ஏன் உணர்ந்து கொள்ளாதிருந்ததென கொள்கை வகுப்புக் குழுவினரிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விக்கணை தொடுத்ததும் அவர்கள் ஒரு கணம் வாயடைத்துப் போயிருந்தனர். தவறான முறையில் இனங்காணப்படுதல் என்பதனை குறித்த விஞ்ஞாபனம் எவ்வாறு குறிப்பிட முடியுமென்பதற்கு அவர்களால் பதிலளிக்கவே முடியாதிருந்தது.
மேற்படி கொள்கை வகுப்பு குழு உறுப்பினரான கே. ஜெயராம் இது குறித்து தெரிவிக்கையில்
இந்த ஆவணம் எதிர்காலத்தைப் பற்றியே சொல்கின்றது. மீனவர்கள் விவகாரத்தில் அவர்கள் எப்படி அறிவுபூர்வமற்ற விதத்தில் இருக்கலாமென்ற அதே கேள்விக்கணைக்கு அவசரமாக பதிலளிக்க முற்பட்ட அவர் நாங்கள் அதனை தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து விலக்கிக் கொள்வோம் என்றார். அந்தக் குறிப்பிட்ட அம்சமானது தமிழ்மொழி பெயர்ப்பில் தவறவிடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் கூறுகையில் அது நேர்த்தியற்ற மொழிபெயர்ப்பொன்றே என தெளிவுறுத்தினார்.
தங்கள் பாரம்பரிய கடற்பரப்பினுள் தமிழக மீனவர்களுக்குள்ள மீன்பிடி உரிமைகளாக இருக்கட்டும் முல்லைப்பெரியார் அணை விவகாரம் அல்லது கூடாங்குளம் அணு உலை விவகாரமாக இருக்கட்டும் இவற்றில் எவை குறித்தும் மேற்படி குழுவானது தெளிவான கொள்கைகளை முன்வைக்க மீண்டும் தவறியுள்ளதுடன் அது கட்சியின் நிலைப்பாட்டை விளக்குவதற்கு சொற்களின்றி தடுமாறியது. இதே சமயம் அணுஉலை செயற்திட்டத்தை உள்ளூர் மக்கள் எதிர்பார்க்கலாயினர். நாமும் அத்தகைய எதனையும் எதிர்க்கவே செய்வோம் என ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஏற்பாட்டாளர் கிறிஸ்டினா சாமி தெரிவித்துள்ள போதிலும் தமது கட்சி கூடாங் குளம் செயற்திட்டத்திற்கு எதிர்ப்பானது என்பதை அவரால் பகிரங்கப்படுத்த முடியாமலேயே போனது.
இதற்கு முன்னர் குறித்த விஞ்ஞாபனத்திற்கான ஒருமுகப்படுத்தப்பட்ட பின்னணியொன்றை கொடுத்துப் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் பொதுக்கொள்கை வகுப்புக்குழுவின் தலைவரான ஆஷா கிருஷ்ணகுமார் இது குறித்து தெரிவிக்கையில் நாட்டில் பொதுமகன் ஒருவரால் முகம் கொடுக்கப்பட்டு வரும் பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்யும் பொருட்டு 5000 மக்களை உள்ளடக்கும் வகையில் விஞ்ஞானபூர்வமான சமூக மட்டத்தில் பகுக்கப்பட்ட மேலோட்டமான ஆய்வொன்று நடத்தப்பட்டதாகவும் அந்த ஆய்வுப்பட்டியலில் ஊழலே முதலிடம் வகித்த நிலையில் நீர் விநியோகம் வேலைவாய்ப்பு விலை அதிகரிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு என்பன அதில் அடுத்து அடங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
http://www.jvpnews.com/srilanka/65311.html

Geen opmerkingen:

Een reactie posten