தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 7 april 2014

வடபகுதியில் தமிழ் மக்கள் மீது இராணுவக் கெடுபிடி!- சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு



ரிசாத் பதியூதீனுக்கு எதிராக களத்தில் இறங்கும் பொதுபலசேனா- தற்கொலை செய்யப் போவதாக பொதுபலசேனாவிடம் மக்கள் எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 10:05.54 AM GMT ]
மன்னார் மாவட்டம் மரிச்சுக்கட்டி பிரதேசத்தில் வில்பத்து வனப் பகுதிக்கு அருகில் குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம் மக்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் பொதுபல சேனா அமைப்பு நாளைய தினம் அங்கு விஜயம் செய்ததாக அதன் நிறைவேற்று செயலாளர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
தமது அமைப்பின் இந்த விஜயம் வெறும் ஆராயும் நோக்கத்தை மாத்திரம் கொண்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், வில்பத்து தேசிய வனத்தை அழித்து அமைச்சர் ரிசாத் பதியூதீன் சட்டவிரோத நிர்மாணிப்புகளை மேற்கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தி வருகிறது.
இதற்கு எதிரான ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால் தாம் நேரடியாக களத்தில் இறங்க போவதாக அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.
மரிச்சுக்கட்டியில் இருந்து வெளியேறுமாறு அழுத்தம் கொடுத்தால் தற்கொலை செய்வோம் - மக்கள் எச்சரிக்கை
வில்பத்து வனத்திற்கு அருகில் மரிச்சுக்கட்டி பிரதேசத்தில் குடியிருக்கும் தம்மை அங்கிருந்து வெளியேறுமாறு பௌத்த அமைப்புகள் மற்றும் அரசாங்க தரப்பினர் அழுத்தம் கொடுத்தால், தற்கொலை செய்து கொள்ள போவதாக அங்கு வசிக்கும் முஸ்லிம் மக்கள் எச்சரித்துள்ளனர்.
அந்த பகுதிக்கு இன்று காலை விஜயம் செய்த பொதுபல சேனா அமைப்பின் பிக்குமாரிடம் அவர்கள் இதனை கூறியுள்ளனர்.
1990 ஆம் ஆண்டு முதல் தாம் இந்த காணிகளில் வசித்து வந்தாகவும் விடுதலைப் புலிகளின் அழுத்தங்கள் காரணமாக அவற்றை கைவிட்டு புத்தளத்திற்கு சென்றதாகவும் போர் முடிவடைந்த பின்னர் மீண்டும் தாம் காணிகளுக்கு திரும்பியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமது காணிகளில் சுமார் 100 ஏக்கர் காணி காடு வளர்ப்புக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதோடு, 300 ஏக்கர் காணியை கடற்படையினர் சுவீகரித்துள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWet3.html
வடபகுதியில் தமிழ் மக்கள் மீது இராணுவக் கெடுபிடி!- சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 02:42.58 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையின் வட பகுதியில் தமிழ் மக்கள் இராணுவ நெருக்குவாரத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், கடந்த ஒரு மாத காலமாக இங்கு நடைபெற்று வருகின்ற இராணுவ சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள் என்பவற்றை முப்படைகளின் தளபதியாகிய ஜனாதிபதி உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கின்றது. 
கோபி என்பவரின் தலைமையில் விடுதலைப் புலிகள் மீண்டும் அணி சேர முயற்சிக்கிறார்கள் எனக் கூறி, அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்து, இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்படுவதாக இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினரால் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், வன்னிப் பிரதேச்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக இராணுவத்தினர் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதிகாலையில் தோட்டத்திற்குத் தண்ணீர் இறைக்கச் செல்லும் தோட்டச் செய்கையாளர்களாகிய வயோதிபர்களும் தங்களுடன் தேசிய அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று இராணுவத்தினர் வற்புறுத்தியிருக்கின்றார்கள்.
இதனால் மீண்டும் ஒரு யுத்த நிலைமை ஏற்பட்டு விட்டதோ என்று தமிழ் மக்கள் அச்சமடைந்திருக்கின்றார்கள். இந்த நிலைமையை இல்லாமல் செய்ய வேண்டும். அதற்கு உடனடியாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளம் பெண்களை இராணுவத்தில் சேர வேண்டும் என்று இராணுவத்திவனர் வன்னியில் வற்புறுத்தி வருவதாகவும், யுத்தத்தில் பெற்றோரை இழந்து தனிமையில் அண்ணனுடன் வாழ்ந்து வருகின்ற தங்கை, இராணுவத்தில் சேர மறுத்ததையடுத்து, அண்ணனை இராணுவத்தினர் கைது செய்ததாக தமக்கு முறையிடப்பட்டிருப்பதாகவும், இத்தகைய நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்றும், இது பற்றியும் ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்பும், விடுதலைப் புலிகள் மீண்டும் அணிசேர முயற்சிக்கிறார்கள் எனக் கூறி, தமிழ் மக்கள் அனைவரையும் நெருக்குத்களுக்கு உள்ளாக்கியிருக்கின்ற நெருக்கடியான சூழலை இல்லாமல் செய்து, அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய சூழலை உருவாக்குவது முக்கியமாகும்.
வட இலங்கையில் தற்போதுள்ள இவ்வாறான நிலைமைகளை எடுத்துக் கூறி பேச்சு நடத்துவதற்காகவே தென்னாபிரிக்காவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பிரதிதிநிதிகள் அடங்கிய குழுவொன்று செல்லவுள்ளது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWeu6.html

Geen opmerkingen:

Een reactie posten