தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 april 2014

பிரபாகரன் மரணித்ததாக அறிவித்த பின்னரும் யுத்தம் நிறைவடையவில்லை!– ஆங்கில ஊடகம்


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் இன்னும் நிறைவடையவில்லை என்று சிலோன் ருடே என்ற ஆங்கில ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்னும் இலங்கைக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுவதாக அந்த பத்திரிகை தமது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த அச்சுறுத்தல் கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் உறுதியாகி இருக்கிறது.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் இராணுவத்தினருக்கு எதிராக முதன் முறையாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர் கோபி என்ற கஜீபன் பொன்னம்பலம் அல்லது கையான் என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
அவரது ஒரு சகோதரர் சுவிட்சர்லாந்தில் வசிப்பதாகவும், ஏனைய இரண்டு பேரும் விடுதலைப் புலிகளில் இணைந்து, யுத்தத்தில் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த பின்னணியே அவரை விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் உடனான நெருங்கிய தொடர்புக்கு வழி செய்துள்ளார்.
அவர் பொட்டு அம்மானிடம் பயிற்சிகளை பெற்று வந்துள்ளார்.
கோபி திருகோணமலையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருக்கு ஒரு குழந்தையும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இருவரும் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோபி யுத்தம் நிறைவடைந்த பின்னர் மக்களோடு இணைந்து இடம்பெயர்ந்தவராக வவுனியா குமாரசாமி முகாமில் தங்கி இருந்த, ஒரு வருடத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் சவுதி அரேபியா சென்றுள்ளார்.
அங்கு அவர் சாரதியாக பணியாற்றியதுடன், புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் மேற்கத்தேய நாடுகளுக்கு சென்று புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் தொடர்புகளையும் பெற்றுக் கொண்டு, கடந்த வரும் ஜுலை மாதம் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESULXmo0.html

Geen opmerkingen:

Een reactie posten