கைதான குறித்த பெண் போராளிகளுள் ஒருவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் மூத்த தளபதியாக இருந்தவரென தெரியவருகின்றது. இலங்கை அரசு இன்று (10.04.14) அறிவித்துள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் பட்டியலில் இந்தப் போராளிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டு இருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
வன்னியில் கைதுகள் தொடர்கின்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரு முன்னணி பெண் போராளிகள் பற்றிய தகவல்களை இலங்கைப் பாதுகாப்பு தரப்பு மறைத்துள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர்களது குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன.
இதனிடையே வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 வயதுடைய சசிகரன் தவமலர் 16 வயதுடைய சசிகரன் யதுர்சினி ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தவமலரின் கணவன் சசிகரன் மத்தியகிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருகின்றார். கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியாவில் வைத்து விசாரணை செய்து வருவதாக தெரியவருகின்றது.
இவர்களில் கோபி என இலங்கை அரசு கூறி வரும் நபரின் மனைவியான 26 வயதுடைய சர்மிளா கஜீபன கோபியின் தாயார் மற்றும் ஜெயக்குமாரி மற்றும் மகள் விபூசிகா ஆகியோரென பத்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலரை கைது செய்துள்ள இலங்கை படைத் துறை சிலறை மறைத்துள்ள தகவல் கசிந்தள்ளது குறிப்பிடத் தக்கது.
http://www.jvpnews.com/srilanka/65245.html
Geen opmerkingen:
Een reactie posten