தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 5 april 2014

அரசின் வர்த்தமானி அறிவிப்பு! அடிப்படை மனித உரிமை மீறல் என்கிறார் சட்டத்தரணி ரட்னவேல்

புலிகளின் சுவிஸ் சொத்துக்களை முடக்க இலங்கை அரசாங்கம் முயற்சி?
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 11:38.11 PM GMT ]
சுவிட்சர்லாந்தில் காணப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்க இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்க்பபடுகிறது.
சுவிட்சர்லாந்து வஙகியொன்றில் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்கும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
சொத்து விபரங்கள் தொடர்பில் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத முகவர் குமரன் பத்மநாதன் தகவல்களை வழங்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரில் அமைந்துள்ள தூதரகத்தின் ஊடாக அரசாங்கம் சொத்துக்களை அரசுடமையாக்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETYLWfs4.html
நிலக்கண்ணி வெடிகளை அகற்ற பெண்களை ஈடுபடுத்துக!– பான் கீ மூன்
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 11:51.18 PM GMT ]
யுத்த பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் அதிக அளவில் பெண்களை ஈடுபடுத்தப்படுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிலக்கண்ணி வெடி அகற்றும் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் இடம்பெறும் நாடுகளில் நிலக்கண்ணி வெடிகள் மிகப்பெரிய சவாலாக காணப்படுகிறது.
பெண்களை அனைத்து சமூக செயற்பாடுகளிலும் ஈடுபடுத்தி அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
இந்த நிலையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளிலும் அவர்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரசின் வர்த்தமானி அறிவிப்பு! அடிப்படை மனித உரிமை மீறல் என்கிறார் சட்டத்தரணி ரட்னவேல்
[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014, 12:12.26 AM GMT ] [ பி.பி.சி ]
வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற 16 தமிழ் அமைப்புகளைத் தடைசெய்துள்ள இலங்கை அரசாங்கம், இந்த அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகின்ற வெளிநாடுகளில் வசிக்கின்ற 424 பேரை இலங்கைக்குள் பிரவேசிப்பதைத் தடைசெய்திருக்கின்றது.
இது தொடர்பில் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவித்தலில் அவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றும் சேர்க்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் பெயர்ப் பட்டியலில் 30 பேர் வரையிலான பெண்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவித்தல் குறித்து கருத்து வெளியிட்ட மனித உரிமை விவகாரங்களில் அனுபவம் வாய்ந்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல், இது நாட்டின் சட்ட விதிகளுக்கு அமையாதது என்று குறிப்பிட்டார்.
அத்துடன் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் ஒருவரின் அடிப்படை மனித உரிமையை மீறுவதாக அமைந்திருக்கிறது என்றும் கூறுகிறார்.
சர்வதேச விசாரணைகள் தேவையில்லை. நாங்கள் உள்நாட்டில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துகிறோம். அதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களையும், அமைப்புகளையும் வரவேற்கிறோம் என்று கூறிக்கொண்டு, இத்தகைய அறிவித்தல்களை வெளியிடுவதன் மூலம் முன்னுக்குப் பின் முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது."
எனினும், பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்கக் கூடாது, மீண்டும் நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyETZLWfty.html

Geen opmerkingen:

Een reactie posten