இலங்கை அரசாங்கம் வடமாகாண சபையை இயங்கவிடாமல் தடுக்கின்றது என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை முலமைச்சர் வாசல்ஸ்தலத்திற்குச் சென்ற சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகத்துடன் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருக்கோ அரசியல் கதைக்க விருப்பம் இல்லை. இருந்தும் முதலமைச்சர் இலங்கை அரசாங்கம் வடக்கு மாகாணசபையை செயற்படவிடாமல் தடுத்து வருகின்றது எனக் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்தின் யாழ்ப்பாணப் பயணம் என்பது ஆங்கிலக் கல்வியை ஆசிரியர்களுக்குப் புகட்டுவதும் பல மாணவர்களுக்க ஆங்கிலக் கல்வியினை மேம்படுத்துவதுமாக அமைந்திருந்தது.
அந்த வகையில் மூவாயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் யாழ் நூலகத்திற்குப் 10 ஆயிரம் புத்தங்களை அவர் அன்பளிப்பாக வழங்கியிருந்ததை இங்கே குறிப்பிடத்தக்கது.
 |
Geen opmerkingen:
Een reactie posten