தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 9 april 2014

ஐ.நா.வின் விசாரணைக்கு பங்கேற்று, உரியமுறையில் பதிலளிக்க வேண்டும்!– லக்ஸ்மன் கிரியல்ல

புலம்பெயர் அமைப்புக்களுக்கான தடை ஜனநாயக ரீதியானதல்ல!– அரியநேத்திரன் - புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களையே தடை செய்துள்ளோம்!- அரசாங்கம்
[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 01:09.23 AM GMT ]
புலம்பெயர் அமைப்புக்களுக்கான தடை ஜனநாயக ரீதியானதல்ல என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். 
புலம்பெயர் அமைப்புக்களை தடை செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்களது அபிலாஷைகள் பற்றி பேசுவது பயங்கரவாதமாகுமா? இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் நல்லிணக்கத்தை மோசமாக பாதிக்கும்.
இடம்பெயர் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை. நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான பிரச்சினைகள் தடையாக அமைந்துள்ளன.
வடக்கில் தொடர்ந்தும் திடீர் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கம் வடக்கில் இராணுவ பலத்தை அதிகரித்துள்ளது என அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களை மட்டுமே தடை செய்துள்ளோம் - அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களை மட்டுமே தடை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
புலம்பெயர் சமூகத்தின் அனைத்து தமிழர்களும் புலிகளுக்கு ஆதரவாக செயற்படவில்லை என சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அவ்வாறானர்கள் நாட்டுக்கு பணம் அனுப்பி வைக்கத் தடையில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் செயற்பட்டும் தரப்பினரையே அசராங்கம் தடை செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.வின் விசாரணைக்கு பங்கேற்று, உரியமுறையில் பதிலளிக்க வேண்டும்!– லக்ஸ்மன் கிரியல்ல
[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 12:58.10 AM GMT ]
அரசாங்கம் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
ஜெனீவா தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
தீர்மானத்தின் ஊடாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடும்.
அரசாங்கம் இவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கத் தயாரா?
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகி;ன்றார்.
அவ்வாறு விசாரணைகளில் பங்கேற்காவிட்டால் எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒருதலைபட்சமாக நிரூபிக்கப்படும்.
விசாரணைகளில் பங்கேற்க வேண்டும். குற்றச்சாட்டுக்களுக்கு உரிய முறையில் பதிலளிக்க வேண்டும்.
புலம்பெயர் அமைப்புக்களை பணம் அனுப்புமாறு அரசாங்கம் கோரியது தற்போது அந்தஅமைப்புக்களை தடை செய்துள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நகைப்பிற்குரியது என லக்ஸ்மன் கிரியல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETdLXnp6.html

Geen opmerkingen:

Een reactie posten