[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 04:35.05 AM GMT ]
மத்திய அரசுக்கும், மாகாண அரசுக்கும் இடையிலான உறவுகள் சுமுகமாக இல்லாத நிலையில், அது குறித்துப் பேசுவதற்காகவே இந்தச் சந்திப்புக்காக அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எனினும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுக்கு எந்தப் பயனுமே கிட்டாத நிலையில் இந்தச் சந்திப்புக்கு முதலமைச்சர் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது.
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியையும், வடமாகாண பிரதம செயலாளர் விஜயலக்சுமி ரமேஷையும் உடனடியாக மாற்றம் செய்யுமாறு ஜனாதிபதியைச் சந்தித்து நேரில் கோரிக்கை விடுத்திருந்தார் முதலமைச்சர்.
சந்திப்பின்போது அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார் ஜனாதிபதி. ஆனால் அவரது உறுதிமொழி எதுவும் செயற்படுத்தப்படவில்லை.
இது குறித்துப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்திருந்த முதலமைச்சர், பேசும் போது ஜனாதிபதி நன்றாகத்தான் பேசுகிறார். ஆனால் பின்னர் எதனையும் செய்வதில்லை என்று கவலைப்பட்டிருந்தார்.
இந்தப் பின்னணியிலேயே அமைச்சர் பஸிலின் சந்திப்பையும் அவர் நிராகரித்து விட்டார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு நேர்மையாகச் செயற்படுவதை செயலில் காட்டாத வரையில், இத்தகைய சந்திப்புக்களால் பயன் ஏதும் இல்லை என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் நினைக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
புலிகளின் நிதியில் வாங்கிய 'ட்றோலர்' படகு பிடிபட்டுள்ளதாம்! கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 05:28.18 AM GMT ]
இந்த 'ட்றோலர்' படகு பிரபாகரனின் ஒரு சகோதரரின் கணக்கிலிருந்து பணம் அனுப்பப்பட்டு அந்தப் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதுடன், அது பிரபாகரனின் மூத்த சகோதரனின் பெயரில் பதியப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
நேற்று முன்தினம் யாழ். வடமராட்சி, பருத்தித்துறை முனையில் கடலுக்குச் சென்று விட்டுத் திரும்பிய 05 மீனவர்களை கடற்கரையில் காத்து நின்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர் என்பது தெரிந்ததே.
அவர்கள் தொழிலுக்குச் சென்ற 'ட்றோலர்' படகு குறித்தே இவ்வாறு கொழும்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
புலம்பெயர் அமைப்புக்களின் தடைக்கான ஆதாரங்கள் என்ன? -இலங்கை அரசிடம் கண்காணிப்பகம் கேள்வி!
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 05:33.34 AM GMT ]
மேற்படி குழுக்கள் அல்லது தனியாட்களின் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்து அரசு சாட்சியங்களை முன்வைக்க வேண்டும் அல்லது அவர்களை அந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மிக மோசமான, ஆனால் செயலிழந்து விட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பிரதான புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்த்துக் கட்டுப் போடுவதற்கு, பயங்கரவாதத்துக்கு பதிலடியாகப் பிரயோகிக்கப்படும் குழப்பகரமான சட்ட விதிகளை இலங்கை அரசு பயன்படுத்துகின்றது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய இயக்குநர் பிரட் அடம்ஸ் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறு பரந்த, விரிவான வகையில் விடுக்கப்பட்டுள்ள தடை உத்தரவு, சர்வதேசத் தொடர்புகளை வைத்திருக்கும் உள்நாட்டு தமிழ் செயற்பாட்டாளர்களையும் அரசியல்வாதிகளையும் தண்டிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கின்றார்.
பிரதான புலம்பெயர் அமைப்புக்களை சட்டவிரோதமாக்கியிருப்பதன் மூலம் அரசு தமிழ் செயற்பாட்டாளர்களை ஆபத்திற்குள் நிறுத்தியிருக்கின்றது.
அமைதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அமைப்புக்களை பயங்கரவாத பட்டியலிட்டிருப்பது இலங்கை அரசின் மிக மோசமான செயற்பாடாகும் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmsyETcLWex0.html
Geen opmerkingen:
Een reactie posten