[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 12:50.56 AM GMT ]
நேற்று முன்தினமும் இவ்வாறு இராணுவத்தினரால் விரட்டி விடப்பட்ட காட்டு யானைகள், தங்களின் பிரதேசங்களில் உடமைகளை சேதப்படுத்தியதுடன், சிலரை தாக்கியும் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியை அண்மித்துள்ள வனப் பகுதியில் இராணுவத்தினர் முகாம்களை அமைத்து தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வனப் பகுதியில் உள்ள யானைகளை, பொது மக்கள் குடியேறியுள்ள பிரதேசங்களுக்குள் இராணுவத்தினர் விரட்டி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கு தங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் அந்த பிரதேசத்தை சென்று பார்வையிட்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWerz.html
புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 50 பேர் கைது! பருத்தித்துறையில் ஐந்து மீனவர்கள் கைது!
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 01:16.20 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்யும் நோக்கில் செயற்பட்டதாக குறித்த ஐம்பது பேர் மீதும் பயங்கரவாத தடைப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.
இறுதிக்கட்ட போரின் போது பாதுகாப்பு படையினரிடம் சரணடையாத முன்னாள் உறுப்பினர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே தடவையில் பாரியளவில் நாளை வேலைகளில் ஈடுபடும் நோக்கில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறையில் ஐந்து மீனவர்கள் கைது
யாழ். வடமராட்சி, பருத்தித்துறை முனையில் கடலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தமிழ் மீனவர்கள் ஐந்து பேர் சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தமிழர் தாயக பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தின் மிலேச்சத்தனமான அடாவடி, கைதுகள், கடத்தல்கள் என்பன வகை தொகையாக நடைபெறுவது யாவரும் அறிந்த விடயம்.
அதன் தொடர்ச்சியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் கடற்கரையில் வைத்து கடற்தொழிலுக்கு சென்று விட்டு கரைதிரும்பிய மீனவர்களான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான மோ.வின்சன் மரியதாஸ்(42) , நான்கு பிள்ளைகளின் தந்தையான பத்திநாதன் ரெஜினோல்ட் (40), நான்கு பிள்ளைகளின் தந்தையான மிக்கேல்பிள்ளை (45) , ஐந்து பிள்ளைகளின் தந்தையான பாபு (44), மூன்று பிள்ளைகளின் தந்தையான ராஜா (30) என்ற ஐவரையும், கரையில் காத்துநின்ற சிறிலங்கா பயங்கரவாத புலனாய்வாளர்களும், காவற்துறையினரும் கைது செய்து பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
பின்பு அங்கிருந்து அவர்களை வவுனியாவுக்கு கொண்டுசென்று தடுத்து வைத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாயக பகுதிகளில் அப்பாவி குடும்பங்கள் தமது அன்றாடம் தொழிலுக்கு சென்றுவிட்டு வந்தாலும் அவர்கள் குடும்பஸ்தர்கள் என்றும் பாராது கண்மூடித்தனமாக அவர்களை கைது செய்தது அப்பகுதி மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWer1.html
புலம்பெயர் தமிழர் அமைப்பினால் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முடியாது!- சட்டத்தரணி மகிந்த
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 01:06.33 AM GMT ]
தமிழீழ விடுதலை புலிகள் மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்து அந்த அமைப்பிற்கு ஆதரவு வழங்கும் குழுக்களை தடை செய்ய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கு செல்லப்போவதாக புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் சில தெரிவித்துள்ளன.
எனினும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெளிநாடுகளில் செயற்படும் 16 அமைப்புகளை தடைசெய்ய அரசாங்கம் கடந்த தினத்தில் தீர்மானித்தது. 2001ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் நிறைவேற்றபட்ட பிரேரணைக்கு அமையவே அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கத்தின் இந்த தீர்மானித்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக புலம்பெயர்ந்தோர் அமைப்புகள் பல தெரிவித்துள்ளன.
எனினும் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை எதிர்ப்பதானால், அதனை இலங்கை நீதிமன்றத்தின் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி மகிந்த ரலபனாவ தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWer0.html
Geen opmerkingen:
Een reactie posten