சம்பந்தன் MP “2012″ உரை தொடர்பில் CID விசாரணை
அந்த உரையின் தயாரிப்பு, அந்த உரையில் அடங்கியிருந்த அம்சங்கள், அந்த உரையின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரதிகள் ஊடகங்களுக்கு அனுப்பட்டமை என்பவை தொடர்பாக சுமார் இரண்டு மணி நேரம் விசாரிக்கப்பட்டு, வாக்குமூலம் பதியப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
http://www.jvpnews.com/srilanka/65159.html
கணவன் வெளிநாட்டில் தாயும் மகளும் வவுனியாவல் திடீர் கைது
வவுனியா, ஆசிகுளம், தரணிகுளம் பகுதியில் வசித்து வந்த தாயும், மகளும் வவுனியா பயங்கரவாத குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் நேற்று (09) இரவு கைது செய்து தாயும், மகளும் விசாரணைக்காக வவுனியா DIG அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு ஆசிகுளம் தரணிகுளம் பகுதியில் உள்ள சசிகரன் தவமலர் (வயது 42) என்பரின் வீட்டுக்குச் சென்ற பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த பெண்ணையும் அவருடன் வசித்து வந்த சசிகரன் யதுர்சினி (16 வயது) மகளையும் கைது செய்துள்ளனர். இம்முறை கல்விப் பொதுசாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள, வவுனியா கோமரசங்குளம் மகா வித்தியாலத்தில் கல்விபயிலும் பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
கணவன் மத்தியகிழக்கு நாடொன்றில் வசித்து வரும் நிலையிலேயே, மனைவியும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/65204.html
வவுனியாவில் இரு பெண்களை கைது செய்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர்
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 08:59.53 AM GMT ]
வவுனியாவில் இரண்டு பெண்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வவுனியா, ஆசிகுளம், தரணிகுளம் பகுதியை சேர்ந்த தாயும், மகளும் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
42 வயதான சசிகரன் தவமலர் என்பரின் வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அந்த பெண்ணையும் அவரது மகளான 16 வயதான சசிகரன் யதுர்சினி என்பவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவன் மத்தியகிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருகிறார்.
கைது செய்யப்பட்டுள்ள 16 வயதான யதுர்ஷினி , வவுனியா கோமரசங்குளம் மகா வித்தியாலத்தில் கல்வி கற்று வருவதுடன் டிசம்பர் மாதம் கல்விப் பொதுசாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை காணாமல் போன தனது மகனை கண்டுப்பிடித்து தருமாறு கோரி போராட்டம் நடத்தி வந்த கிளிநொச்சியை சேர்ந்த ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோர் அண்மையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
ஜெயகுமாரி தற்போது பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரது மகள் கிளிநொச்சியில் சிறுவர் காப்பகம் ஒன்றில் பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnwy.html
Geen opmerkingen:
Een reactie posten