[ ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2014, 03:24.39 PM GMT ]
பதுளை சாரவியா தோட்டப் பிரிவொன்றைச் சேர்ந்த நடராஜா குகநந்தினி என்ற 18 வயது நிரம்பிய மாணவியே இரு தினங்களாக வீடு திரும்பாதவராவார்.
இம்மாணவி க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றி முடிவுகள் வரும் வரை வீட்டில் காத்திருந்துள்ளார். முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதை அறிந்த அம்மாணவி சார்வியா தோட்டத்திலிருந்து பதுளைக்கு வந்துள்ளார். பதுளை வந்த அவர் இரு தினங்களாக வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பதுளை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். பதுளை பொலிஸார் இப் புகாரையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை இம்மாணவி குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லையென்று பொலிஸாரும் மாணவியின் பெற்றோரும் தெரிவித்தனர்.
பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் அம்மாணவி இருந்த போதிலும் அம்மாணவி மூன்று 'எஸ்' தர சித்திகளும் ஒரு 'சீ' தரச்சியுடன் நான்கு பாடங்களில் மட்டுமே சித்தியடைந்திருக்கின்றார்.
தமது பெரும் எதிர்பார்ப்பு பயனளிக்காமையினாலேயே அம்மாணவி வீடு திரும்பவில்லையென்றும் கூறப்படுகின்றது.
காணாமல்போன மாணவியை தேடி அவரது பெற்றோரும் பதுளைப் பொலிஸாரும் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தமது மகள் வேறு எங்கும் சென்றிருக்க முடியாது. அவரிடம் ஐந்நூறு ரூபா பணம் மட்டுமே இருந்ததென்றும் மாணவியின் பெற்றோர் கூறுகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyETaLWeq0.html
சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பெயரும், மரணமானவர் பெயரும் தடைப் பட்டியலில்...!
[ ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2014, 04:15.33 PM GMT ] [ பி.பி.சி ]
கடந்த வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகள் உட்பட 16 அமைப்புகள் மற்றும் 400 க்கும் அதிமான தனி நபர்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களும் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா அரியநேத்திரன் பிபிசி தமிழோசையிடம் தெவித்தார்.
நாட்டை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு அமைப்பாளர் என்று கூறப்படுபவரின் பெயரும் அதில் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
நாட்டை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு அமைப்பாளர் என்று கூறப்படுபவரின் பெயரும் அதில் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர்களின் பெயர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையின் நிர்வாகப் பொறுப்பிலுள்ளவர்களின் பெயர்களும் அதில் உள்ளன எனக் கூறும் அரியநேத்திரன், அதன் காரணமாக உள்ளூர் மக்கள் பெரும் கவலையும் கலக்கமும் அடைந்துள்ளதாகவும் கூறுகிறார்.
அரசின் பட்டியல் வெளியானதை அடுத்து தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு மீண்டும் எற்பட்டுள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
உள்ளூர் மக்களின் பெயர்களும் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இருப்பது தொடர்பில் பலர் தொடர்ச்சியாகத் தன்னிடம் வந்து முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் இதன் காரணமாக சமூகப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன எனறும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவை மட்டுமல்லாமல் கனடாவிலிருந்து இயங்குவதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ள சில அமைப்புகள் தற்போது இயங்கவில்லை என்றும் அவை இயங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ள விலாசங்கள் தவறானவை என்று ஊடகச் செய்திகள் வந்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyETaLWeq2.html
Geen opmerkingen:
Een reactie posten