தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 juni 2013

வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்து இலங்கை இராணுவ வீரர்கள் வெளியேற்றம்!

சரத் பொன்சேகாவிற்கு மீண்டும் அழைப்பாணை
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 02:51.25 PM GMT ]
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மீண்டும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூன்று தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகத் தவறியதனால் மீண்டும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை பிறப்பிக்குமாறு மேல் நீதிமன்ற நீதவான் குமுதினி விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இராணுவத் தலைமையகத்தில் சரத் பொன்சேகா மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் செல்வராஜா கிருபாகரன் எனப்படும் அலினயார் மொஹமட் நிஸ்தார் லத்தீப், சண்முகம் சூரியகுமார் மற்றும் தம்பய்யா பீ. தனுஷ் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்து இலங்கை இராணுவ வீரர்கள் வெளியேற்றம்!
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 03:16.00 PM GMT ]
குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அண்மையில், பல்வேறு அரசியல் கட்சி சார்பில் வெலிங்டன் இராணுவ முகாம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், வெலிங்டன் இராணுவ பயற்சி முகாமை நாளை முற்றுகையிட போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.

இதனிடையே, வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்த இலங்கை இராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

http://www.tamilwin.net/show-RUmryGRYNdmqy.html

வெலிங்டன் பயிற்சியை மாற்ற முடியாது: கோட்டபாய ஆவேசம் !
25 June, 2013 by admin
தமிழகத்தின் வெலிங்டன் இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் இலங்கை படை அதிகாரிகள் இருவரையும், வேறெந்த பயிற்சி கல்லூரிக்கும் இடம்மாற்றுவதை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை படை வீரர்களுக்குத் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதனை தமிழக அரசும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், வெலிங்டனில் பயிற்சி பெற்று வரும் இரு படை அதிகாரிகளையும் புனேயில் உள்ள இராணுவத் தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரிக்கு இடம்மாற்றும் யோசனையை இந்தியா முன்வைத்துள்ளது.
இந்தியாவின் நிலைப்பாட்டினை அடுத்து பாதுகாப்பு செயலர் இந்தியாவுடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளார். அதன்போது இன்னொரு பயிற்சிக் கல்லூரிக்கு இலங்கை படை அதிகாரிகளை இடம்மாற்றும் திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் இணங்காது.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

படை அதிகாரிகள் ஒரு ஆண்டு பயிற்சிநெறியை வெலிங்டனில் தொடர முடியாமல் போனால், அவர்களை இலங்கை பெரும்பாலும் திருப்பி அழைக்கும். தற்போது விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் இந்திய -இலங்கை உறவுகளைக் சீர்குலைக்க முனைகின்றன. பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் நேரத்தில், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி, இலங்கை படை அதிகாரிகளுக்கு தடை விதிப்பது மோசமான பின்னடைவாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten