தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 juni 2013

இலங்கை - சீனா உறவுகள் இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது! உயர்ஸ்தானிகர்


கடத்தல் சம்பவத்துடன் பொலிஸாருக்கு தொடர்பு? - கடத்தப்பட்ட நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 04:55.29 AM GMT ]
கடத்தல் சம்பவத்துடன் பொலிஸாருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாத்தண்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் குளியாபிட்டி பொலிஸ் விசாரணைப் பிரிவிற்கு தொடர்பு இருப்பதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாத்தாண்டிய கால்வாய் வீதி என்னும் இடத்தைச் சேர்ந்த ராஜத லக்மால் மனோஜ் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டவர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் கடமையாற்றியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை குளியபிட்டி பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துச் சென்றுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
குற்றச் செயல் ஒன்று தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
2ம் இணைப்பு
கடத்தப்பட்டதாக கூறப்படும் நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது 
நாத்தாண்டிய, பிரதேசத்தில் கடத்திசெல்லப்பட்டதாக கூறப்படும் நபரை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரே கைதுசெய்துள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாத்தாண்டிய, கால்வாய் வீதியில் வசிக்கும் ரஜித லக்மால் மனோஜ் (வயது 34) என்ற நபர் வான் ஒன்றில் வந்தவர்களால் நேற்று மாலை கடத்திசெல்லப்பட்டதாக அவரது மனைவி மாறவில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இம் முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி நபர் கடத்தப்படவில்லை என்றும் அவர், குளியாப்பிட்டி விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கும் மாறவில பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நபர் அரச திணைக்களமொன்றில் காவலாளியாகவும் சிறு வியாபாரமும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை - சீனா உறவுகள் இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது! உயர்ஸ்தானிகர்
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 06:04.32 AM GMT ]
இலங்கை, சீனாவுடன் பேணி வரும் உறவுகள் அயல்நாடான இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது என அந்நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை மிக நெருங்கிய நட்பு நாடாகவே இலங்கை கருதி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் சிறந்த உறவு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் மிகப் பழமையான உறவுகள் காணப்படுவதாகவும், குறிப்பாக அபிவிருத்தி அடிப்படையிலான உறவுகளே பேணப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten