[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 12:08.05 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்ட, குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம், விக்கிரகம் மற்றும் ஆலய சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை மற்றும் மாங்காடு பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரக திருட்டு மற்றும் கிரான்குளம் ஐயனார் ஆலய உண்டியல் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பரிவிலுள்ள குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்!
கடந்த ஒரு சில வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் தங்க நகைகள், ஆலய விக்கிரகங்கள், ஆலய பொருட்கள் என்பன களவாடப்படும் நிலமை அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
அந்தவகையில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயம், புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மன் ஆலயம், மிறாவோடை பத்திரகாளி அம்மன் ஆலயம் உட்பட்ட பல ஆலயங்களில் களவுகள் நடைபெற்றது.
ஆனால் சனிக்கிழமை நள்ளிரவு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் திருடர் குழுவினரினால் ஆலய மூல விக்கிரங்கள், இதர கருங்கல் விக்கிரங்கள், அதாவது மூல விக்கிரகமாக முருகன், வள்ளியம்மை, தெய்வானை மற்றும் இதர விக்கிரங்களான வைரவர், சண்டேஷ்வரர், மயில்வாகன பீடம், பலிபீடம், கொடித் தம்ப பிள்ளையார், ஒன்பது நவகிரகம், மாரியம்மன் உட்பட்ட பல விக்கிரகங்கள் கிளப்பப்பட்டு அதன் அடியில் பதிக்கப்பட்ட தங்க இயந்திர தகடுகள் களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை கேள்வியுற்றதும் அவ்விடத்திற்கு சென்று நிலைமையை கண்ணுற்று மிகுந்த கவலையடைந்துள்ளேன்.
கடந்த 30 வருட கால யுத்த சூழலில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை. ஆனால் தற்போது 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதாக அரசாங்கம் அறிவிக்கப்பட்ட பின்னரே இவ்வாறான கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அண்மைக் காலமாக ஆலயங்களில் களவு சார்பாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் எடுத்துக் கூறியுள்ளேன். ஆலயங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஆலய தர்மஹர்;த்தா சபையினரால் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்;காக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி ஆலயங்களில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களை விசாரிப்பது பொலிஸாரின் அசமந்ததனமாக செயற்பாடாகவும் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில காலம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் சார்பாக பொலிஸார் இதுவரை களவாடப்பட்ட பொருட்களோ, திருடர்களையோ இதுவரை கைது செய்யப்படவில்லை.
உண்மையில் குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தங்க இயந்திர தகடுகள் திருடப்பட்டமை, மாங்காடு பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரக திருட்டு மற்றும் கிரான்குளம் ஐயனார் ஆலய உண்டியல் திருட்டு சம்வபங்கள் அனைத்தும் கவலையை தருகின்றது. எனவே இங்கு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் போன்று தங்களுடைய ஆலயங்களில் இடம்பெறவிருந்ததாக ஆலய தர்மஹர்த்தா சபையினர் தனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஆலயங்களின் தங்க நகைகள் பாதுகாக்க வேண்டிய சூழலில் தாங்கள் தற்போது உள்ளோம். இவ்விடயமாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கதைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன்.
இச்சம்பவத்தை நான் மீண்டும் மீண்டும் கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
பிள்ளையாரடி பகுதி புத்தர் சிலை விவகாரம்! மேல்நீதிமன்றத்தை நாடப் போவதாக விகாராதிபதி அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 12:17.02 PM GMT ]
குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிராக கடந்த புதன்கிழமை அந்தப் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலிஸார் முன்வைத்த அறிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், அதற்கான பணிகளுக்கு தடை விதித்திருந்தது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அம்பிட்டியே சுமனரத்ன தேரர், ஏற்கனவே பிள்ளையாரடி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஒரு புத்தர் சிலை உள்ளதாக குறிப்பிட்டார்.
அந்த சிலை தற்போத சேதமடைந்து காணப்படுகின்றது.
குறித்த சிலை நிறுவப்பட்டுள்ள இடம் தனியார் காணி என்பதால் புனரமைப்பு செய்வதில் பிரச்சினைகள் உள்ளன.
இதன் காரணமாகவே அந்த இடத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் பிறிதொரு இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்குரிய தூரம் மற்றும் செல்லும் வழியை காட்டும் அறிவித்தலுடன் அந்த இடத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
எனினும், அதற்கான அனுமதி இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மக்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உள்ளுர் மக்களும் இணைந்து நடத்திய ஆர்பாட்டம் தொடர்பாக அவரிடம் வினவப்பட்டது.
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும், எங்களால் புத்தர் சிலை வைக்கமுடியாமல் போனால் வேறு யாரால் வைக்க முடியும்´? என்று கூறினார்.
நாட்டில் 10 தமிழ்க் குடும்பங்கள் வாழும் இடங்களில் கூட உயரமான இந்து ஆலயங்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு நகர பிரதான நுழைவாயிலில் ஏனைய மதத்தவர்களும் விரும்பினால் தங்களது சமய அடையாளங்களுடன் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பாதை அறிவிப்புகளை அதே இடத்தில் நிறுவலாம் என்றும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்ததார்.
இதனிடையே, மட்டக்களப்பு நீதிமன்றம் புத்தர் சிலை வைப்பதற்கும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் ஏற்கனவே விதித்துள்ள தடை உத்தரவில் எதிர்வரும் 12ம் திகதி மங்களராமய விகாராதிபதியையும் சில உள்ளுர் மக்களையும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் பொலிஸ் ஊடாக அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten