கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் கோவிலுக்கு நடந்ததே பரடைஸ் பிளேசுக்கும் நடக்கும்- பிரபா கணேசன் எம்.பி. கவலை
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 09:15.02 AM GMT ]
கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் கோவில் அகற்றப்பட்டதைப் போல ஆமர் வீதி பரடைஸ் பிளேசில் வசிக்கும் மக்களுக்கும் ஏற்படும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் கோவில் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டதை கடைசி தினத்திலே அரசியல்வாதிகளுக்கு தெரிவித்து குறிப்பாக அரச தரப்பில் இருக்கும் ஒரே கொழும்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான எனக்கும் விக்கிரகங்களை அகற்றும் தினப்பூஜைக்கு அழைத்து இழைக்கப்பட்ட அநீதியை ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.
விடுதலைப் பேராட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் என்ன என்ற ஆய்வுகள் எங்களை மீளமைப்புச் செய்வதற்கு மிகவும் அவசியமானவை. அந்த வகையில் இராணுவபலம் என்பதைத் தவிர அரசியல் பலம் பற்றிய சிந்தனைகள் விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை என்றே விமர்சிப்போரும் இருக்கவே செய்கின்றனர்.
இதே கதிதான் இன்று கொழும்பு ஆமர் வீதி பரடைஸ் பிளேசில் வசிக்கும் மக்களுக்கும் ஏற்படும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது,
கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலய விவகாரம் கடந்த 12ம் திகதி சிலைகளை அகற்றும் தினத்தன்று ஆலயத்திலிருந்து 50 மீற்றர் தூரத்தில் வசிக்கும் எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே போல் ஏனைய எதிர்க்கட்சி அரசியல் தலைமைகளுக்கும் கடைசி நேரத்திலே தெரிவித்துள்ளார்கள் என அறிய முடிகிறது.
நான் உடனடியாக நகர அதிகார சபை தலைவருடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடம் ஆலயம் கட்டுவதற்கான உகந்த இடமாக இல்லை என்பதை தெளிவுபடுத்தி மாற்று இடத்தை வழங்குமாறு கேட்டுள்ளேன்.
நகர அபிவிருத்தி சபை தலைவரும் ஆவன செய்து தருவோம் என உறுதியளித்துள்ளார்.
ஆலயம் கட்டுவதற்கு உகந்த இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
இருப்பினும் தங்களது பிரச்சினையை கடைசி நேரத்திலே அரசியல்வாதிகளுக்கு தெரிவித்துவிட்டு அரசியல்வாதிகளை குறை கூறுவது முறையானதல்ல என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.
இது சம்பந்தமாக ஜனாதிபதியின் இந்து மத ஆலோசகர் பாபு சர்மா அவர்களுக்கு முழுமையாக தெளிவுபடுத்தியுள்ளேன்.
அதே நேரத்தில் அரசாங்க தரப்பில் இருக்கிறோம் என்பதற்காக ஆகாயத்தில் இருப்பவற்றை உடனடியாக ப+மிக்கு கொண்டு வருவதற்கு இந்த அரசாங்கம் ஒரு போதும் இடங்கொடுக்காது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல் கொழும்பு ஆமர் வீதி பெரடைஸ் பிளேசிலும் கொழும்பு நகர சபையினர் மண் பரிசோதனை செய்கிறோம் என்றும் தொடர்மாடி கட்டிடம் கட்டித் தருகின்றோம் என்றும் அப்பகுதியிலே சலவைத் தொழிலாளர்களுக்கு பலவிதமான தொந்தரவினை கொடுத்து வருவதாக என்னிடம் அங்குள்ளவர்கள் புகார் செய்துள்ளனர்.
கொழும்பு மாநகரசபையினரும் அங்கு தாங்கள் என்ன செய்ய போகின்றோம் என்பதை தெளிவாக அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்காததினால் பலவித ஊகங்களினால் அவர்கள் மத்தியிலே அச்சம் எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக மாநகரசபை முதல்வர் முஸம்மில் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திய போது அப்பகுதியிலே மண் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்மாடி கட்டிடம் கட்டுவதற்கு உகந்ததா என உறுதி செய்வதற்காகவே தாங்கள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தொடர்மாடி கட்டிடம் கட்ட முடியுமாயின் நிச்சயமாக அங்குள்ளவர்களுக்குத்தான் வீடுகள் கொடுக்கப்படும் எனவும் உறுதி செய்துள்ளார்.
மண் பரிசோதனை செய்வதற்காக சலவை தொழிலாளர்களின் துணிகளை உலர்த்தும் இடத்திற்கு தற்காலிகமாக வேறு இடம் வழங்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனை மூலமாக தொடர்மாடி கட்டிடம் கட்ட முடியாவிட்டால் அந்த இடத்தில் சலவை தொழிலாளர்களுக்கு மீண்டு தொழில் செய்வதற்கு கொடுக்கப்படும் எனவும், அதே நேரம் தொடர்மாடி கட்டிடம் கட்ட முடியுமாயின் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தை நிரந்தரமாக வழங்குவோம் எனவும் உறுதியளித்துள்ளார்.
அது மட்டுமின்றி தொடர்மாடி கட்டிடம் கட்டப்படுமேயாயின் அங்குள்ளவர்களுக்கே வீடு வழங்கப்பட வேண்டும் எனவும், தற்போது ஒரு சில வீடுகளில் ஒரு குடும்பத்திற்கும் அதிகமானவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் கருத்திற் கொள்ளுமாறும் அதே நேரம் சிங்கள மக்களிடமிருந்து பல வருடங்களுக்கு முன்பு வீடுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அதே நேரத்தில் புதிய வீடுகள் மட்டும் அவர்களுக்கு தீர்வுகள் ஆகாது. மாறாக என்பது வருடங்களுக்கு மேலாக சலவை தொழில் செய்து வரும் இவர்களுக்கு தொழில் செய்வதற்கு தகுந்த இடம் வழங்கப்பட வேண்டும் எனவும் மாநகர முதல்வரிடம் கேட்டிருந்தேன். அவரும் முழுமனதுடன்; இதனை ஏற்றுக் கொண்டார். இதனை இப்பகுதி மக்களுக்கு சென்று அறிவித்து மாநகர முதல்வர் மீது நம்பிக்கை வைத்து செயல்படுமாறும் கேட்டுக் கொண்டேன்.
இவை அனைத்தையும் செவி மடுத்து அங்குள்ள பெரியவர்கள், தாய்மார்கள், சகோதர, சகோதரிகள் செவிமடுத்தனர். ஆனால் இன்று அதையும் மீறி அங்குள்ள ஒரு சிலர்; அவர்களை குழப்பி மனித உரிமை மீறல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்வதாக கேள்வியுற்றேன்.
கொழும்பு மாநகரத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஏதேனும் அநீதிகள் இடம்பெறுமாயின் தலைநகரிலே அதிக நம்பிக்கைப் பெற்ற கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியிடமோ அல்லது கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமான என்னிடமோ முன்கூட்டியே தெரிவித்து எங்களது ஆலோசனையின் படி சம்பந்தப்பட்ட மக்கள் செயல்படுவோர்களேயாயின் நியாயங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அதை தவிர்த்து தாண்தோண்டி தனமாக ஒற்றுமையின்றி மக்கள் செயல்படுவோர்களேயாயின் ஒரு போதும் தமக்குரிய தீர்விணை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாது.
மீண்டும் நவகம்புர 2 பகுதியில் இருக்கும் கோயில் நகர அபிவிருத்திசபை மூலமாக பாதிக்கப்படவுள்ளதாக அறிந்துள்ளேன். இதனையும் அப்பகுதி மக்கள் கருத்திற் கொண்டு எம்மிடமோ அல்லது மனோ கணேசனிடமோ வரவேண்டும்.
கடைசி நேரத்தில் அரசியல்வாதிகளை குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. என்னைப் பொறுத்தவரையிலே யார் தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தாலும் அதனை முழுமையாக வரவேற்பேன்.
சிங்கள மக்களின் ஆதரவைப் பெறும் பிரசார பொறிமுறை உடன் அவசியம்
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 09:10.10 AM GMT ] [ valampurii.com ]
படைப்பலத்தையும் அரசியல் பலத்தையும் சமாந்திரமாகக் கட்டியெழுப்பி இருக்கவேண்டும். ஆனால் அரசியல் என்பதோ திரும்பிப் பார்க்கப்படாத பகுதியாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்களில் நியாயம் இல்லாமலும் இல்லை.
விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்பதற்காக தமிழ் மக்கள் தோற்றுப்போன இனமாகவே வாழுதல் என்பது ஏற்புடையதல்ல.
எனவே எங்களுக்கான உரிமை, எங்களுக்கான தேசியம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அந்தச் சிந்தனையின் மத்தியில் பலமான அடித்தளம் இடப்படுவது அவசியம்.
தமிழ் புத்திஜீவிகள், அரசியல் அனுபவஸ்தர்கள், சட்ட வல்லுநர்கள் என ஒரு பலமான கட்டுமானம் முதலில் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகளே தனித்து தமிழர்கள் உரிமைகள் பற்றியும் அதற்கான இராஜதந்திர தீர்வை பற்றியும் தீர்மானிக்கின்ற நிலைமை இருக்குமாயின் தமிழ் மக்களின் நிலைமையில் முன்னேற்றகரமான சம்பவங்கள் எதுவும் நடந்து விடாது.
இப்போதுகூட போரில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ் மக்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்து விடுவார்கள் என்ற அச்சம் ஆளும் வர்க்கத்திடம் இருக்கவே செய்கின்றது.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாணசபைக்கு வழங்குவதானது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்ற பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் கருத்து மேற்போன்ற சந்தேகத்தை உறுதி செய்கின்றது.
அதேநேரம் தமிழ் மக்களுக்கு சிங்கள ஆளும் வர்க்கம் எதனையும் தரப்போவது இல்லை என்ற மனநிலை தமிழ் மக்களிடம் இருக்கவே செய்கின்றது.
இந்த இருநிலை வேறுபாடுகள் இனவிவகாரத்தை நீட்டிச் செல்வதற்கு தூண்டுகோலாக அமைந்து விடுகின்றது என்பது உண்மை.
ஆனாலும், இந்த இருவேறுபாட்டு நிலைமைகளுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கான உரிமை வழங்கப்படவேண்டும்.
வடக்கு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை கொடுக்க வேண்டும் என்ற கருத்து நிலைகொண்டவர்களும் சிங்கள மக்களில் பலர் இருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் அறிந்து கொள்வது அவசியம்.
13-ம் திருத்தச் சட்டமூலத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கின்ற ஜாதிக ஹெல உறுமயவை கடுமையாக எதிர்க்கின்ற அமைசசர்கள் பலர் இருக்கிறார்கள் என்ற செய்தி தமிழ் மக்களுக்கு மிகவும் சாதகமானது.
ஆக நாம் இங்கு கூறவருவது எல்லாம், தமிழ் மக்களுக்கு ஆதரவாக சிங்கள மக்களை திசை திருப்புதல் அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுதல் என்பதாகும்.
இதுவிடயத்தில் முந்தியும் இப்போதும் கூட நாம் கரிசனை காட்டவில்லை என்றே கூற வேண்டும். சிங்களவர்கள் என்பதற்காக அவர்கள் ஒட்டு மொத் தத்தில் எங்களுக்கு எதிரானவர்கள் என்ற நினைப்பு அபத்தமானது.
எங்களுக்கு ஆதரவானவர்கள் அவர்களிலும் இருக்கிறார்கள் என்றால் அத்தகையவர்களை நாம் எமக்கானவர்களாக ஆக்கிக் கொண்டால் காரியம் கனகச்சிதமாய் நிறைவு பெற்றுவிடும்.
அமைச்சர்களான ராஜித சேனாரட்ன,டியு குணசேகர, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண போன்றவர்கள் தமிழ் மக்கள் சம உரிமையோடு வாழவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்.
இத்தகையவர்களின் கூட்டு தென்னிலங்கையில் பலமாகி விட்டால் பேரினவாதிகளின் கொட்டம் தானாக அடங்கி விடும்.
எங்களது நிலைமைகளை எடுத்துச் சொல்லாதவிடத்தும் எங்கள் பற்றிய எதிர்வினையான பிரசாரம் செய்யப்படும் போதும் தமிழர்களுக்கு ஆதரவான சிங்களவர்களும் எதிர்ப்போக்கை அடைவர் என்ற உண்மையின் மத்தியில், எங்கள் பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தும் பிரசார பொறி முறை உருவாக்கப்படுவது காலத்தின் அவசர தேவையாகும்.
Geen opmerkingen:
Een reactie posten