தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 juni 2013

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் காணி விற்பனை செய்ய தடை!

மாகாணசபை அதிகாரக் குறைப்பு! புலம்பெயர் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளுமே காரணம்!- தயா மாஸ்டர்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 11:40.09 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக அரசாங்க தரப்பினருக்கு தெரியப்படுத்தியதாக விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். 
வட- மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த போது, தாம் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக அவர் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.
அரசாங்கக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் புனர்வாழ்வுக்காக செயற்பட முடியும் என்றும் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி கூறினார்.
இதேவேளை, அரசாங்கத்தில் உள்ள கடும்போக்கு தேசியவாதக் கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிரான தீவிரவாதக் கருத்துக்களை முன்வைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அப்படியான கடும்போக்கு வாதக் கருத்துக்கள் நிலவுவதாகக் கருதவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
புலம்பெயர் தமிழர்களும் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் தனித் தமிழீழம் அமைய வேண்டுமென்று கோரி வருவதாலேயே அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களுக்கு வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் சந்தேகங்கள் ஏற்படுவதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் காணி விற்பனை செய்ய தடை!
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 12:24.18 AM GMT ]
இலங்கையில் அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்யும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 
இதன் பிரகாரம், பரிசு, விற்பனை, நன்கொடை உள்ளிட்ட எவ்விதத்திலேனும் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்க முடியாது. இதற்கு இனி சட்டத்தில் இடமில்லை.
இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர்கள், குத்தகைக்கு மாத்திரமே காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
காணி உரிமையாளர்கள், தங்களது காணிகளை குத்தகைக்கு விடுவார்களாயின் குத்தகைக்கு விடும் காலம் அதிகபட்சம் 99 ஆண்டுகள் மாத்திரமேயாகும் எனவும் ஜனாதிபதியின் அந்த யோசனையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten