[ வெள்ளிக்கிழமை, 21 யூன் 2013, 12:19.24 PM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூவரும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று பேர்லின் பயணமாகின்றனர்.
இலங்கையின் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்கு இன்று நியமிக்கப்பட்டுள்ளது. 19 அங்கத்தவர்களை கொண்ட இந்த தெரிவுக்குழுவுக்கு அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதேபோல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ. கஜேந்திரன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
இதனைவிட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் இந்த மாநாட்டிற்காக பேர்லின் செல்கின்றனர்.
கடந்த வருடமும் பேர்லினில் இத்தகைய மாநாடு இடம்பெற்றிருந்தது.
அதன் தொடர்ச்சியாகவே இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் வெவ்வேறு தலையங்கங்களில் கருத்துரை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பை மாற்றியமைக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 21 யூன் 2013, 04:30.40 PM GMT ]
இந்தக் குழுவில் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், மைத்திரிபால சிறிசேன, அநுரபிரியதர்சன யாப்பா, தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேம்ஜயந்த, ஏ.எல்.எம்.அதாவுல்லா, ரிஷாட் பதியுதீன்,
சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, பஷில் ராஜபக்ச, லக்ஷ்மன் செனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார, சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் மற்றும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ஜனக பண்டார ஆகியோரே அங்கம் வகிக்கின்றனர்.
சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, பஷில் ராஜபக்ச, லக்ஷ்மன் செனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார, சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் மற்றும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ஜனக பண்டார ஆகியோரே அங்கம் வகிக்கின்றனர்.
இந்த அறிவிப்பை சபாநாயகர் சமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இன்று விடுத்தார்.
இக்குழுவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். எனினும ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இக்குழுவில் இடம்பெறவில்லை.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி இந்த குழுவில் தங்களுடைய பிரதிநிதிகளை நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தெரிவு செய்யும் என்றும் இது தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டார் என்றும் அவர் சொன்னார்.
2ம் இணைப்பு
இந்தத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவும் இல்லை.
ஐநாவின் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை கொடுத்த உறுதிமொழியிலிருந்து பின்வாங்க முடியாது என்றும், அந்த யோசனைகளின்படி செயற்படுவதற்கே தாமும் தயாராக இருப்பதாகவும், அப்படி பின்வாங்குவதாக இருந்தால் அதற்கு மனித உரிமைகள் பேரவையின் அனுமதியை இலங்கை பெறவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஜெனிவா தீர்மானங்களின் அடியொற்றியே பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும் என்றும் ரணில் மேலும் கூறினார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய மொழிகள் மற்றும் சமூக இணக்கப்பாட்டுக்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் உள்வாங்கிக் கொள்ளவேண்டியது அவசியம் என்று தெரிவுக்குழு கூட்டம் தொடங்கிய பின்னரும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அமைச்சர் வாசுதேவ கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten