தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 juni 2013

முன்னாள் புலி உறுப்பினர்கள் தூதரகமொன்றில் புகலிடம் கோரியுள்ளனர்


வடக்கு தேர்தலில் ஜனநாயகத்தை படுகொலை செய்ய இலங்கை அரசு திட்டம்!: விக்கிரமபாகு கருணாரட்ன
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 11:06.17 AM GMT ]
வடக்குத் தேர்தலின் போது நீதி, நியாயம், ஜனநாயகம் ஆகியவற்றைப் படுகொலை செய்வதற்கு இலங்கை அரசு திட்டம் தீட்டி வருகின்றதென நவசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த அடிக்கடி சீனாவுக்கு ஓடுவதால் சீனா இலங்கைக்குச் சார்பாகவே செயற்படும் என கருதிவிடக்கூடாது.
ஏனெனில் இலங்கையை இந்தியா துணிவுடன் எதிர்க்குமானால் அதற்கு சீனாவும் நிச்சயம் பச்சைக்கொடி காட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 13வது திருத்தத்திற்கு எதிராக அமைச்சர்களையும், அமைப்புக்களையும், தூண்டிவிட்டு ஜனாதிபதி மகிந்த அரசியல் ஆட்டம் ஆடுகின்றார்.
13ஐ ஒழிப்பதற்கு மகிந்த அரசு துடிக்கையில் மானம் கெட்ட மன்மோகன் அரசு மெளனம் காத்து வருகின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை சீனாவின் பக்கம் முழுமையாக சாய்ந்து விடும் என்ற அச்சத்தில் தெற்காசியாவின் வல்லரசான இந்தியா இலங்கையிடம் பணிந்து போகின்றது.
இந்தியா இலங்கையை எதிர்க்காததால் தான் சீனா கூட இலங்கைக்கு ஆதரவு வழங்குகின்றது. இந்தியா துணிவுடன் முதுகெலும்புடன் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு சீனாவும் நிச்சயம் ஒத்துழைப்பு வழங்கும். என்பதை டில்லி உணரவேண்டும்.
அதேவேளை வடக்குத் தேர்தல் நடைபெறுவது உறுதியானாலும், அதற்கு முன்னர் அரசு செய்யவேண்டிய காரியங்களைக் கச்சிதமாக செய்து முடித்து விடும்.
எனவே வடக்குத் தேர்தல் நீதியாகவும், நியாயமானதாகவும் நடைபெறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் புலி உறுப்பினர்கள் தூதரகமொன்றில் புகலிடம் கோரியுள்ளனர்
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 03:08.59 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மேற்குலக நாடொன்றின் தூதரகமொன்றில் புகலிடம் கோரியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐம்பது முன்னாள் புலி உறுப்பினர்கள் இவ்வாறு புகலிடம் கோரியுள்ளனர். இவர்களில் முன்னாள் பெண் புலிப் போராளிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புனர்வாழ்வு முகாம் ஒன்றிலிருந்து விடுக்கப்பட்ட புலி உறுப்பினர்களே இவ்வாறு போலியான தகவல்களை வழங்கி குறித்த தூதரகத்தில் அடைக்கலம் கோரியுள்ளனர்.
இவர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்க சில தமிழ் அரசியல்வாதிகளும் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten