தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 juni 2013

புலிகளுக்கு உதவி வழங்கிய கேர்ணலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

முக்கிய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது- பாதாள உலகக் குழுத் தலைவர் இத்தாலியில் கைது
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 03:39.31 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி படகு மூலம் புறப்பட்டுச்சென்ற 88 பேரை அண்மையில் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
இந்த 88 பேரில் குறித்த புலிகளின் சிரேஸ்ட உறுப்பினரும் உள்ளடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியைச் சேர்ந்த ஆரியனந்தன் பார்த்தீபன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார் என சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலகக் குழுத் தலைவர் இத்தாலியில் கைது
இலங்கைப் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதீவ் தேவ நதுன் தர்மவிக்ரம என்னும் 42 வயதான கொஸ்கொட நதுன் என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியின் மிலான் வெனித்தியா பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக குறித்த நபர் கருதப்படுகின்றார். சந்தேக நபருக்கு எதிராக இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேரை குறித்த நபர் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளுக்கு உதவி வழங்கிய கேர்ணலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 03:49.42 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கிய இராணுவ கேர்ணல் ஒருவருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு நடைபெற்ற தயட்ட கிருல கண்காட்சியில் புலிகள் குண்டுத் தாக்குதல் நடாத்த குறித்த இராணுவ கேர்ணல் ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சாட்சியங்கள் தொடர்பில் தகவல்களை திரட்ட கால அவகாசம் வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.
இதன்படி, குறித்த தகவல்களை திரட்டுவதற்கு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
கேணல் ரஞ்சித் சந்திரசிறி பெரேரா எனப்படும் ஆர்மி அங்கிள் என்பருக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
புலிகள் அமைப்பின் கந்தவம் கோகுலம் எனப்படும் இன்பம் என்பவருக்கும் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் கனகரட்னம் ஆதித்யன் எனப்படும் அண்ணாவுக்கும் குண்டுத் தாக்குதல் நடாத்த ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten