தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 juni 2013

அவுஸ்திரேலியாவில் கொள்ளையா்கள் அட்டகாசம்! நள்ளிரவில் வீடுபுகுந்து கத்திவெட்டு! இலங்கையர் 4பேர் படுகாயம்


வடக்கு தேர்தலில் ஜனநாயகத்தை படுகொலை செய்ய இலங்கை அரசு திட்டம்!: விக்கிரமபாகு கருணாரட்ன
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 11:06.17 AM GMT ]
வடக்குத் தேர்தலின் போது நீதி, நியாயம், ஜனநாயகம் ஆகியவற்றைப் படுகொலை செய்வதற்கு இலங்கை அரசு திட்டம் தீட்டி வருகின்றதென நவசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த அடிக்கடி சீனாவுக்கு ஓடுவதால் சீனா இலங்கைக்குச் சார்பாகவே செயற்படும் என கருதிவிடக்கூடாது.
ஏனெனில் இலங்கையை இந்தியா துணிவுடன் எதிர்க்குமானால் அதற்கு சீனாவும் நிச்சயம் பச்சைக்கொடி காட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 13வது திருத்தத்திற்கு எதிராக அமைச்சர்களையும், அமைப்புக்களையும், தூண்டிவிட்டு ஜனாதிபதி மகிந்த அரசியல் ஆட்டம் ஆடுகின்றார்.
13ஐ ஒழிப்பதற்கு மகிந்த அரசு துடிக்கையில் மானம் கெட்ட மன்மோகன் அரசு மெளனம் காத்து வருகின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை சீனாவின் பக்கம் முழுமையாக சாய்ந்து விடும் என்ற அச்சத்தில் தெற்காசியாவின் வல்லரசான இந்தியா இலங்கையிடம் பணிந்து போகின்றது.
இந்தியா இலங்கையை எதிர்க்காததால் தான் சீனா கூட இலங்கைக்கு ஆதரவு வழங்குகின்றது. இந்தியா துணிவுடன் முதுகெலும்புடன் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு சீனாவும் நிச்சயம் ஒத்துழைப்பு வழங்கும். என்பதை டில்லி உணரவேண்டும்.
அதேவேளை வடக்குத் தேர்தல் நடைபெறுவது உறுதியானாலும், அதற்கு முன்னர் அரசு செய்யவேண்டிய காரியங்களைக் கச்சிதமாக செய்து முடித்து விடும்.
எனவே வடக்குத் தேர்தல் நீதியாகவும், நியாயமானதாகவும் நடைபெறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கொள்ளையா்கள் அட்டகாசம்! நள்ளிரவில் வீடுபுகுந்து கத்திவெட்டு! இலங்கையர் 4பேர் படுகாயம்
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 01:04.33 PM GMT ]
அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதிகள் மீது கொள்ளையர்கள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் நான்கு இலங்கைத் தமிழர்கள்  கத்திவெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தனர். மேலும், அகதிகள் பலர் தாக்குதலுக்கு இலக்காகினர்.
படுகாயமடைந்த அகதிகள் நால்வரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர  அல்பியன்ஸ் பகுதியில் இன்று சனிக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் குறித்த இலங்கை அகதிகளின வீட்டிற்குள் கத்தி, இரும்புக்கம்பி மற்றும் பொல்லுகளுடன் புகுந்த கொள்ளையர்கள் சுமார் 20 பேர், அவர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தினர்.
இதன்போது நான்கு இலங்கை அகதிகள் கத்திவெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தனர். மேலும், பலர் தாக்குதலுக்கு இலக்கினர். படுகாயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இதேவேளை, இலங்கை அகதிகளின் கைத்தொலைபேசிகள், மடிக்கணினிகள், பணம் என்பன கொள்ளையார்களால் சூறையாடப்பட்டுள்ளன.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சென்ற கையோடு, மீண்டும் மதியம் 12 மணியளவில் அங்கு வந்த கொள்ளையர்கள் பகிரங்கமான முறையில் குறித்த அகதிகள் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். எனினும், அங்கிருந்த அகதிகள் அனைவரும் தப்பித்து ஓடியதால் அவர்களின் திட்டம் பலிக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் தெரிவித்தவை வருமாறு:
நாங்கள் இருவர் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள், எம்மை இடைமறித்து நாம் வாங்கி வந்த பொருட்களை தந்துவிட்டுச் செல்லுமாறு மிரட்டினர்.
ஆனால், நாங்கள் அவர்களின் மிரட்டலுக்கு பணியாது வீடு சென்று விட்டோம். அதன் பின்னர் நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டிற்குள் புகுந்த சுமார் 20 பேர் எங்களை கத்தியால் வெட்டியதுடன் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நாம் தற்போது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் உள்ளோம். பொலிஸார் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களை அவர்கள் கைது செய்யவில்லை - என்றனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் இலங்கை அகதிகளிடம் பணம் பொருட்களை பறிப்பதுடன் தாக்குதல்களும் அண்மைக் காலமாக தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten