தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 juni 2013

13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்க இந்திய தூதுக்குழு


வீட்டில் தனிமையிலிருந்த பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை! நீர்கொழும்பில் சம்பவம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 03:40.18 AM GMT ]
வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி  படுகொலை செய்துள்ள சம்பவமொன்று நீர்கொழும்பு திவுலபிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். .
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
மஞ்சநாயக்க பிரேமாவதி இன்ற 59 வயதுடைய வயோதிப் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக திவுலபிட்டி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இந்த பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்துள்ளதாகவும் ஏனைய இருவரும் அவருடன் கூட மது அருந்தியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாவது,
திவுலப்பிட்டி பிரதேசத்தில் மூன்று பேர்  ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ளனர். மதுபானம் தீர்ந்து போகவே பிரதான சந்தேக நபர் மதுபானம் வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அவ்வாறு சென்றவரே தன்மையில் இருந்த பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.
வீட்டிற்குள் வந்த சந்தேக நபர் குறித்த பெண்ணுக்கு அறிமுகமானவர்.  இதனை பயன்படுத்தி மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்த சந்தேகநபர் அப்பெண்ணை படுக்கையறைக்குள் வைத்து வல்லுறவு புரிந்துள்ளார்.
இதன்போது அப்பெண் இவருடன் எதிர்த்துப் போராடவே அவரது தலையை பிடித்து கட்டிலின் விளிம்பில் மோதியுள்ளார். தொடர்ந்து அப்பெண் தப்பியோடி சமையலறைக்குள் புகுந்துள்ளார்.
அங்கு வைத்து அவரது தலையைப் பிடித்திழுக்க அவர் நிலத்தில் வீழ்ந்துள்ளார். அப்போது சந்தேகநபர் பெண்ணின் தலையை நிலத்தில் மோதி கொலை செய்துள்ளார். அதன் பின்னர் பெண்ணின் சடலத்தை மறைத்து வைத்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்துள்ளார்.
இதனை பெண்ணின் வீட்டின் கீழ்ப்பகுதியில் இலத்திரனியல் உபகரணங்களை பழுதுபார்க்கும் நிலையத்தை நடத்திவரும் நபர் அவதானித்துவிட்டு சந்தேகநபரிடம் விசாரித்துள்ளார்.
அதன்போது சந்தேகநபர் தான் அன்ரியைப் பார்க்க வந்ததாகவும் அவர் வீட்டில் இல்லை எனவும் தனக்காக நண்பர்கள் காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இவரது நடவடிக்கை தொடர்பில் சந்தேகமடைந்த கடை நடத்துனர் உடனடியாக பொலிஸ் அவசர பிரிவிற்கு அறிவித்துள்ளதை அடுத்து பிரதான சந்தேக நபருடன் மதுபானம் அருந்திய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்க இந்திய தூதுக்குழு
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 03:16.18 AM GMT ]
13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்க இந்திய தூதுக்குழுயொன்று விஜயம் செய்யவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வட மாகாணசபைத் தேர்தல், காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படவுள்ளது.
இந்திய எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்ட ஆறு பேர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். எதிர்வரும் 4ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐந்து சிரேஸ்ட அமைச்சர்கள், புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரி, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரதிநிதி, வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்ட பதினைந்து பேர், இந்திய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. எனினும், அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten