தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது தொடர்பாக இன்று லோக்சபாவில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.
இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய அ. தி.மு.க., எம்,பி, தம்பித்துரை கூறுகையில்:
பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு பல கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால் இது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
பல இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய அரசு இது வரை ஒரு சிங்கள மீனவரையாவது கைது செய்திருக்கிறதா?
நமது கடற்படையினர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்.
சமீப காலமாக இலங்கை அரசின் இந்த அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., தரப்பில் பேசிய டி.கே.எஸ்., இளங்கோவனும் மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து பேசினார்.
இதனால் காங், அ.தி.மு.க., தி.மு.க., எம்.பி.க்களிடையே காரசார விவாதம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றில் ஏற்பட்ட அமளி காரணமாக இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன .
இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 70 க்கும் மேற்பட்ட மீனவர்கள் தற்போது இலங்கை கடற்படை வீரர்கள் வசம் இருப்பதால் அவர்கள் எப்போது திரும்பி வருவர், அவர்களது நிலை என்னவாகும் என்ற கவலையில் இராமேஸ்வரம் மீனவ குடும்பத்தினர் உள்ளனர்.
http://news.lankasri.com/show-RUmryDSYNYgq3.html
| Rajya Sabha adjourned over harassment of fishermen by SL Navy |
| [ Thursday, 14 March 2013, 10:43.34 AM GMT +05:30 ] |
AIADMK and DMK members raised the issue soon after the house met for the day.
DMK member Tiruchi Siva said “harassment”of Indian fishermen by the Sri Lankan Navy was an “ongoing affair” and six such incidents had occurred over the past month.
V Maitreyan of AIADMK also expressed his concern over the matter and sought an answer from the government.
Chairman M Hamid Ansari asked Maitreyan to take his seat amid noisy scenes in the house on the issue. As the din continued, the chairman adjourned the house till 12 noon.
Bharatiya Janata Party members M Venkaiah Naidu and Mukhtar Abbas Naqvi earlier sought suspension of Question Hour to discuss the terrorist attack in Srinagar on Wednesday in which five CRPF personnel were killed.
|
Geen opmerkingen:
Een reactie posten