இலங்கையின் தேசிய ஆள் அடையாள அட்டை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அச்சிடப்பட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 2ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தேசிய அடையாள அட்டை தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய ஒரு ஆவணம் என அவர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு சிங்கள மொழியில் விநியோகிக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு சிங்கள மொழி தெரியாத வடக்கு கிழக்கு மாகாண மக்களிடம் சென்ற போது பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்தாக அவர் கூறினார்.
இதுதவிர, தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் அரச மற்றும் நிர்வாக மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பிறந்த நாட்டிலேயே இவ்வாறான சிக்கல்களுக்கு முகங்கொடுப்பது கவலைக்குரிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten