கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குமாறு சீனா இலங்கையை வலியுறுத்தி இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தியோகபற்றற்ற வகையில் இந்த செய்தி வெளியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவுடன் முரண்பாட்டினை வளர்த்துக் கொள்ளாமல், நல்லுறவை பேணுமாறும் சீனா இலங்கையை வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இரகசியமாக நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இலங்கைக்கு சீனா தொடர்சியாக ஆதரவை வெளியிட்டு வந்த நிலையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை, சீனாவின் புதிய ஜனாதிபதியாக க்சீ ஜின்பின் நியமனம் பெற்றதன் பின்னர், இலங்கை தொடர்பான அந்த நாட்டின் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten