தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 maart 2013

இலங்கை அகதிகளை நாடுகடத்த முடிவெடுத்த ஐநா அகதிகள் அமைப்புக்கு எதிராக போராடுவோம்! சீமான்


துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் 19 பேலை இலங்கைக்கு நாடுகடத்த ஐ.நா.வின் அகதிகள் காப்பு அமைப்பு முடிவெடுத்துள்ளது. அவ்வாறு நாடுகடத்தினால்  ஐ.நா. அகதிகள் அமைப்பை கண்டித்து பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என  சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு செப்டம்பரில் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற 49 இலங்கைத் தமிழ் அகதிகள், நடுக்கடலில் படகு பழுதான காரணத்தினால் ஐக்கிய அரபு குடியரசின் கடற்படையால் காப்பாற்றப்பட்டு, துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 30 பேர், அவர்கள் செல்ல விரும்பிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மீதமுள்ள 19 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு நாடு கடத்த துபாயில் இயங்கிவரும் ஐ.நா.வின் அகதிகள் காப்பு அமைப்பு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
எந்த நாட்டில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதற்காக, அங்கிருந்து தப்பி வேறொரு நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்களோ அவர்களை மீண்டும் அதே நாட்டிற்கு அனுப்ப முடியாது. ஆனால் ஐ.நா. அகதிகள் அமைப்பு அப்படியொரு முடிவை எந்த அடிப்படையில் எடுத்துள்ளது என்று தெரியவில்லை.
துபாயில் உள்ள அகதிகளை அவர்கள் விரும்பும் மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ திருப்பி அனுப்பினால், ஐ.நா. அகதிகள் அமைப்பை கண்டித்து பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
ஈழத் தமிழ் ஏதிலிகளை வதைப்பதை ஐ.நா.வும் தமிழக காவல்துறையும் நிறுத்த வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
உயிரையும் வாழ்வையும் காப்பாற்றிக் கொள்ள தஞ்சமடையும் ஈழத் தமிழ் ஏதிலிகளை வதைப்பதை ஐ.நா.வும் தமிழக காவல்துறையும் நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களை ஒரு திட்டமிட்ட இன அழித்தல் செய்து வரும் இலங்கையின் சிங்கள பெளத்த இனவாத அரசிடம் இருந்து தங்கள் குடும்பத்தோடு உயிரையும், வாழ்வையும் காப்பாற்றிக்கொள்ள தமிழ் மக்களை ஒரு திட்டமிட்ட இன அழித்தல் செய்து வரும் இலங்கையின் சிங்கள பெளத்த இனவாத அரசிடம் இருந்து தங்கள் குடும்பத்தோடு உயிரையும், வாழ்வையும் காப்பாற்றிக்கொள்ள தமிழ்நாட்டில் தஞ்சமடையும் ஏதிலிகளை தமிழக காவல்துறையின் க்யூ பிரிவும், அயல் நாடுகளில் ஏதிலிகளாக தஞ்சமடையச் செல்லும் ஏதிலிகளை, அவர்கள் விரும்பிய நாட்டிற்கு அனுப்பி வைக்காமல் இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கும் ஐ.நா.வின் ஏதிலிகள் அமைப்பும் தொடர்ந்து வதைத்து வருகின்றன.
பூந்தமல்லியில் தமிழக காவல் துறையால் சிறப்பு முகாம் என்ற பெயரில் இருக்கும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரகுமாரை சந்திக்க வந்த அவரது மனைவி ஜெயநந்தினிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தனது கணவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஜெயநந்தினி, தனது குழந்தைகளுடன் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டார். மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயநந்தினியையும், அவரது குழந்தைகளையும், தற்கொலை முயற்சி செய்தார்கள் என்ற பேரில் க்யூ பிரிவு காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இதனைக் கேள்விப்பட்ட சந்திரகுமார் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சிறையில் இருக்கும் கைதியை பார்ப்பதற்கு அவருடைய மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் அனுமதி அளிப்பது சட்டப்பூர்வமான கடமையாகும். ஆனால், ஈழத் தமிழ் ஏதிலிகளை சித்ரவதை செய்து கொடுமைபடுத்துவதையே வழமையாகச் செய்துவரும் தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு, சட்டத்திற்குப் புறம்பாக அனுமதி மறுத்ததன் விளைவே இந்த பிரச்சனைக்குக் காரணமாகும்.
தமிழீழ மக்களின் நலனிற்காக பல நல்ல திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, தமிழினத்தின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு தீர்மானமாக நிறைவேற்றியும் உள்ளார்.
ஒரு பக்கத்தில் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்காக இப்படிப்பட்ட நல்ல நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொண்டுவரும் நிலையில், மறுபக்கம் தமிழக காவல் துறையின் க்யூ பிரிவினர் இங்கு ஏதிலிகளாக இருந்துவரும் மக்களை மனிதாபிமானமற்ற வகையில் துன்புறுத்தி வருகின்றனர்.
தமிழக காவல்துறையின் க்யூ பிரிவினரின் அராஜகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி பல போராட்டங்களை நடத்தி, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஆனால், க்யூ பிரிவின் அராஜகம் தொடர்ந்து நீடித்துக்கொண்டே செல்வது வினோதமாகவுள்ளது.
ஒரு பக்கத்தில் இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்திற்கான சரியான அரசியல் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளுவதும், மறுபக்கம், அதன் காவல்துறை இங்குள்ள ஈழத் தமிழ் ஏதிலிகளை சொல்லொனா கொடுமைக்கு ஆளாக்குவதும் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது. இது மேலும் தொடருமானால் இவ்வரசுக்கு எதிராக தொடர் பரப்புரைகளும் போராட்டங்களையும் நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
க்யூ பிரிவின் கொடுமையை சகிக்க முடியாத காரணத்தினால், கடந்த ஆண்டு செப்டம்பரில் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் ஆஸ்ட்ரேலியாவிற்கு தப்பிச் சென்ற 49 ஏதிலிகள், நடுக்கடலில் படகு பழுதான காரணத்தினால் ஐக்கிய அரபுக் குடியரசின் கடற்படையால் காப்பாற்றப்பட்டு, துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 30 பேர், அவர்கள் செல்ல விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மீதமுள்ள 19 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு நாடுகடத்த துபாயில் இயங்கிவரும் ஐ.நா.வின் அகதிகள் காப்பு அமைப்பு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது ஐ.நா. அகதிகள் அமைப்பின் நோக்கத்திற்கு முரணான நடவடிக்கையாகும்.
எந்த நாட்டில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதற்காக, அங்கிருந்து தப்பி வேறொரு நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்களோ அவர்களை மீண்டும் அதே நாட்டிற்கு அனுப்ப முடியாது. ஆனால் ஐ.நா. அகதிகள் அமைப்பு அப்படியொரு முடிவை எந்த அடிப்படையில் எடுத்துள்ளது என்று தெரியவில்லை.
ஐ.நா. அகதிகள் அமைப்பு கூட இலங்கை அரசின் ஒட்டுண்ணி அமைப்பாகிவிட்டதா என்று கேட்கிறோம். இந்த அறிக்கையின் மூலம் ஐ.நா. அகதிகள் அமைப்பிற்கு நாம் தமிழர் கட்சி விடுக்கும் கோரிக்கையாவது:
துபாயில் உள்ள ஏதிலிகளை அவர்கள் விரும்பும் மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினால், ஐ.நா. அகதிகள் அமைப்பை கண்டித்து பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten