ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரங்களை செய்து வரும் சர்வதேச அமைப்புக்களுக்கு, போர்க்கள வீடியோ காட்சிகளை சில ஊடகவியலாளர்கள் வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தொலைக்காட்சி சேவையொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் இவ்வாறு தகவல்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான செயற்படுவோர் இவ்வாறு போர்க்களத்தில் செய்தி திரட்டிய ஓர் ஊடகவியலாளரை விலைக்கு வாங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் என்ன செய்கின்றார் என்பது எமக்குத் தெரியும். இவ்வாறான பிரசாரங்கள் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தாது.
போலிப் பிரசாரங்களின் மூலம் எமக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது.
போரை எதிர்த்த தரப்பினர், இன்றைய ஜெனீவா பிரச்சினைக்கு அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை நிர்வாகத் திறனின்மையே காரணம் என குற்றம் சுமத்துகின்றனர்.
போர் இடம்பெற்ற காலத்தில் இதனை விடவும் அதிகளவு சர்வதேச அழுத்தங்கள் நிலவின. வெளியுறவுக் கொள்ளை நிர்வாகத் திறனுக்கும் சர்வதேச சக்திகளின் தலையீட்டுக்கும் தொடர்பில்லை.
காலணித்துவ நாடுகள் மற்றும் புலம்பெயர் சமூகத்தின் தேவைக்காகவே இவ்வாறு இலங்கையின் மீது தலையீடு செய்யப்படுவதாக ஜனாதபதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDRYNZlv3.html
Geen opmerkingen:
Een reactie posten