அரசின் தயட்ட கிருல கண்காட்சியின் பல பாகங்களிலும் சிங்கள மயமாகவே காணப்படுகின்றது. பொருட்கள், காட்சிக்கூடங்கள், மொழிகள் என்பன சிங்களமாயமாகவே அமைந்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
இக்கண்காட்சியில் தமிழ் மக்களைக் கொன்றழிக்க பயன்படுத்திய யுத்த ஆயுதங்களும் போர் விமானங்களின் மாதிரிகளும் அதிகளவு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், இவற்றினைப் பார்வையிட்ட தமிழ் மக்கள் மிக மிகக் குறைவானதாக உள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இருந்த போதிலும் தமிழ் பாடசாலை மாணவர்களை பாடசாலை நிர்வாகம் அழைத்துவந்து காண்பித்து செல்வதனையும் அவதானிக்க முடிகின்றது.
இக்கண்காட்சியில் காட்சிக்காக அதிகளவான இராணுவம் சார்ந்தவைகளாகவும் அரசாங்கம் சார்ந்தவைகளாகவும் காணப்படுகின்றமை மற்றுமோர் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இக்கண்காட்சியின் 6வது திமான இன்று ஊடகத்திற்குரிய நாளாகும். இவற்றைக் கருத்தில் கொண்டு சில ஊடகவியலாளர்களும் ஏனையோரும் இக்கண்காட்சியினை பார்வையிட்டும் வருகின்றனர்.
இக்கண்காட்சியின் 6வது திமான இன்று ஊடகத்திற்குரிய நாளாகும். இவற்றைக் கருத்தில் கொண்டு சில ஊடகவியலாளர்களும் ஏனையோரும் இக்கண்காட்சியினை பார்வையிட்டும் வருகின்றனர்.
இருந்தபோதிலும், இவ்வூடக கண்காட்சியில் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் கருத்துக்களோ ஆலேசனைகளோ எதுவும் காணப்படவில்லை. கண்காட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள ஊடக வலயமைப்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக அமைப்புக்களின் காட்சிக்கூடங்கள் காணப்படுகின்றன.
Geen opmerkingen:
Een reactie posten