தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

யாழில் ஆசிரியரின் தாக்குதலில் மாணவனின் செவிப்பறை உடைந்தது!- பொலிஸார் விசாரணை


யாழில் ஒருநாளான சிசு மரணம்!- விசாரணை செய்யக்கோரி பெற்ற தாய் கதறல்
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 07:13.46 AM GMT ]
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருநாளான சிசு திடீரென மரணமாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிரேமகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் குழந்தைப் பேற்று விடுதியில் நேற்று முன்தினம் இரவு 8.35 மணிக்கு பிறந்த சிசு மறுநாள் காலை 9.30 மணிக்கு மரணமாகியுள்ளது.
உரும்பிராய் தெற்கு, உரும்பிராயைச் சேந்த சத்தியசிவரூபன் சுபாஜினி (வயது 27) என்ற இளம் தாய்க்கு பிறந்த முதல் குழந்தையே இவ்வாறு மரணமாகியுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி  குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிசு மரணம் தொடர்பில் குழந்தையைப் பெற்ற தாய் சந்தேகிப்பதாகவும் இது தொடர்பான விசாரணை தேவை என தாயார், தன்னிடம் கோரியுள்ளதாக அவர் கூறினார்.
இதனால் இந்த சிசுவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மருத்துவப் பரிசோதணைக்கு சிசுவை உட்படுத்துமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் தாம் கோரியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிரேமகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.


யாழில் ஆசிரியரின் தாக்குதலில் மாணவனின் செவிப்பறை உடைந்தது!- பொலிஸார் விசாரணை
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 07:46.23 AM GMT ]
யாழ். நகரின் பிரபல தனியார் பாடாசலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் மீது அப்பாடசாலையின் ஆசிரியர் தாக்கியதனால் மாணவரின் செவிப்பறை உடைந்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த தனியார் கல்லூரி ஆறாம் ஆண்டில் கல்வி பயிலும் கோண்டாவிலைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளான்.
குறித்த மாணவன், யாழ். போதனா வைத்தியசாலையின் 11ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த திங்கட்கிழமை குறித்த மாணவன் தவணைப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு பி.ப. 1.00 மணியளவில் பாடசாலையில் தரித்திருந்த வேறு மாணவர்களுடன்  குழுவேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எழுந்து நின்றுள்ளான்.
அங்கு வந்த குறித்த ஆசிரியர் கையால் மாணவரின் கன்னத்தில் தாக்கியதாகவும் இதன் காரணமாகவே மாணவனது செவிப்பறை உடைந்தாகத் தெரியவருகின்றது.
இந்தச் சம்பவம் குறித்து யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, குறித்த பாடசாலையின் அதிபரும் கொழும்பு சென்றிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten