தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

கௌதம புத்தர் இலங்கையில் பிறக்கவில்லை!- நாகொட விபஸ்ஸி தேரர்


கௌதம புத்தர் இலங்கையில் பிறக்கவில்லை என ரத்மலானை தர்ம ஆய்வு மையத்தின் பணிப்பாளர் நாகொட விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
கௌத புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை எனவும் இலங்கையில் பிறந்ததாகவும் அதற்கான புனித தள சாட்சியங்கள் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்திருந்தார்.
கௌதம புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை. அதனால் பௌத்த மத வழிபாடுகளுக்காக இந்தியாவிற்கு செல்ல வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உடுவே தம்மாலோக தேரரின் இந்தக் கருத்து குறித்து பகிரங்க விவாதம் நடாத்தத் தயார் என நாகொட விபஸ்ஸி தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கௌதம புத்தரின் பிறப்பு தொடர்பில் இவ்வாறான அடிப்படையற்ற கருத்துக்களை வெளியிடுவதனையிட்டு உடுவே தம்மாலோக தேரர் வெட்கப்பட வேண்டும்.
தமிழ் புலம்பெயர் மக்களின் பிரச்சாரங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உடுவே தம்மாலோக தேரர் சிக்கியிருக்கின்றார் என நாகொட விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten