தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 maart 2013

தமிழகத்திலிருந்து வந்த அனைவரையும் நாடு கடத்த வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய


தமிழகத்திலிருந்து சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்துள்ள அனைவரையும் நாடு கடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வீசா மூலம் நாட்டில் இருக்கும் சகல தமிழக பிரஜைகளை நாடு கடத்துவதுடன், இந்திய மத்திய அரசாங்கத்திற்கு இராஜதந்திர ரீதியிலான அதிருப்தி வெளியிடப்பட வேண்டும்.
ஈழ இராச்சியம் தொடர்பில் வெகுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென கோரி தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய எந்தவொரு அரசியல்வாதியும் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது.
அவர்களின் சொத்துக்கள் ஏதேனும் இலங்கையில் இருந்தால் அவற்றை அரசுடமையாக்க வேண்டும். ஜெயலலிதாவும் கருணாநிதியும் இலங்கைக்கு எதிராக போட்டியிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழகத்தில் வாழும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள், வர்த்தகர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என இந்திய மத்திய அரசாங்கம் இதுவரையில் எவ்வித வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten