[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 08:58.14 AM GMT ]
தான் பல பிரச்சினைகளில் இருந்தபோதும் இலங்கை அரசும் இலங்கை கிரிக்கெட்டும் தனக்கு பல உதவி, ஒத்துழைப்புக்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐபில் போட்டியில் இலங்கை வீரர்கள் பிரச்சினை தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த முரளிதரன் மேலும் கூறியதாவது,
"இது கிரிக்கெட்டுக்கு ஒரு கவலைக்குரிய நாள். இந்தியாவின் சில பகுதிகளில் விளையாட நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. இது ஒரு அரசாங்க தீர்மானம். அவர்கள் எமக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்றால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நான் ரோயல் செலன்ஜர்ஸ் அணிக்காக விளையாடுகிறேன். அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது. சென்னை தவிர்ந்த ஏனைய போட்டிகளில் என்னால் விளையாட முடியும்.
முன்னர் இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் யுத்தம் காணப்பட்டது. ஆனால் இன்று எனது நாட்டில் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். எனவே ஆட்சேபனை தெரிவிக்கும் இந்திய தரப்பினர் இலங்கைக்கு கட்டாயம் வந்து முன்னர் நடந்தவற்றை மறந்து அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கின்றனர் என பார்க்க வேண்டும். இப்போதுள்ள நிலைபோன்று மீண்டுமொரு யுத்தத்தை நாங்கள் விரும்பவில்லை.
எங்களை விளையாட அனுமதித்தால் நாம் நிச்சயம் சென்னையில் விளையாடுவோம். சென்னை எனக்கு இரண்டாவது தாய்நாடு. காரணம் எனது மனைவி மதிமலர் இங்குதான் உள்ளார். இது எனக்கொரு உணர்வுபூர்வமான நிலை. நாங்கள் அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை. கிரிக்கெட் விளையாடி எங்கள் ரசிகர்களை மகிழ்விக்கவே விரும்புகிறோம்."
இவ்வாறு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய ஐபிஎல் ரோயல் செலன்ஜர்ஸ் அணி வீரருமான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten