[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 12:59.14 AM GMT ]
நாட்டில் மீளவும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இனவாதத்தை தூண்டி அதன் மூலம் வர்த்தக மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடாத்தும் முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.
குசழஅ: வுழிளிin டீயடடநச
தமிழகத்தில் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டங்களும், தமிழக முதல்வர் அவர்களது சட்டசபைத் தீர்மானங்களும் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் சங்கடங்களை உருவாக்கி வருகின்றது.
இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார்.
ஏதேனும் ஓர் இடத்தில் இனக்கலவரம் இடம்பெற்றால் உடனடியாக சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குழுக்களினால் தாக்குதல் நடத்தப்படக் கூடிய சில முக்கிய வர்த்தக நிலையங்கள் கட்டிடங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட வகையில் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலைமையை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட வகையில் இன மத முறுகலை ஏற்படுத்த முயற்சிப்போரின் வதந்திகளுக்கு மக்கள் செவிமடுக்க வேண்டியதில்லை.
கடந்த 28ம் திகதி பெப்பிலியான பெஷன் பக் நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இவ்வாறு இன முறுகலைத் தூண்டும் வகையிலானது. இந்தத் தாக்குதலுக்கும் பொதுபல சேனா அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
தனிப்பட்ட நபர்களுக்கோ அல்லது அமைப்புக்களுக்கோ அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது தொடர்பில் பொலிஸாரிடம் அறிவிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
குசழஅ: வுழிளிin டீயடடநச
"ஈழத் தமிழர்கள் மீது இன்னொரு இனப் படுகொலைத் திட்டம்"! காங்கிரஸ் கட்சியின் பரிசீலனையில்?
[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 11:47.14 PM GMT ]
வெறும் எட்டே பேர் கொண்ட லயோலா கல்லூரி மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை தி.மு.க.வினருக்கு ஏற்படுத்தியது. தி.மு.க.வின் வெளியேற்றத்தை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நீண்ட கால வரலாற்று ரீதியான தொடர்புகள் காரணமாகவே தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தமிழீழத் தீர்மானம் இந்திய மத்திய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் குறித்த காலத்திலோ, அதற்கு முன்பாகவோ நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை மீளக் கைப்பற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் அரிதாகவே காணப்படுகின்றது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் தெரிவான 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை வழங்கி இருந்தனர்.
தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், தமிழகத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பான எவரும் தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியம் அறவே கிடையாது.
இந்த அச்சம் காரணமாகவே, தமிழக காங்கிரஸ் கட்சியினர் மாணவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக மாணவர்களது நியாயமான உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களது வன்முறையற்ற போராட்டங்களுக்கு தமிழக அரசும் இடையூறுகள் ஏற்படுத்தாத வண்ணம் தவிர்த்துக் கொள்கின்றது.
இதனால், மாணவர்கள் போராட்டத்தை முற்றாகத் தடுப்பதற்காக, அவர்களை வன்முறைப் பாதைக்கு வலிந்து இழுப்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் பெரு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற போதும், மாணவர்கள் தொடர்ந்தும் அமைதி வழிகளிலேயே போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது, காங்கிரஸ் கட்சியினர் எதிர்பாராதது.
எனவே, மாணவர்களது போராட்டம் தவறானது என்று அவர்கள் மீது பழியினைப் போட்டு, தங்களது அரசியல் சரிவினைச் சரி செய்வதற்காக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இன்னொரு சதித் திட்டத்தை அரங்கேற்ற உள்ளதாக தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளாகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலை விடவும் கொடூரமான இந்தத் திட்டம் உண்மையில் அரங்கேற்றப்படுமானால், இலங்கைத் தீவில் இன்னொரு தமிழின அழிப்பாகவே அது இருக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அதாவது, சிங்கள இனவாதிகளை உசுப்பேற்றி இனக் கலவரம் என்ற போர்வையில் தமிழ் மக்கள்மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் ஒரு பாரிய சதி இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் இலங்கையில் நிகழ்த்தப்படும் அபாயம் உள்ளது என்பதே அந்த எச்சரிக்கையின் உள்ளடக்கம்.
கடந்த சில நாட்களாக, இனக் கலவரம் குறித்த சொல்லாடல்கள் சிங்கள ஆட்சியாளர்களாலும், அவர்களது பங்களிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவாலும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களை அச்சுறுத்தும் நோக்கிலான இந்தச் சொல்லாடல், மறைமுகமாக சிங்கள இனவாத்தத்தை உசுப்பேற்றுவதற்கானதாகவும் உள்ளது.
இன அழிப்பிற்குள்ளான தமிழீழ மக்களுக்கு நீதி கோரும் தமிழக மாணவர்களது தொடர் போராட்டத்தையும், தமிழக அரசின் தீர்மானங்களையும் சிங்கள தேசியவாதத்திற்கான அச்சுறுத்தலாகக் காண்பிப்பதன் மூலம் 83 ற்கு ஒப்பான கொதி நிலையை சிங்கள இனவாதிகள் மத்தியில் உருவாக்குவதன் மூலம் இந்தச் சதி அரங்கேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகளை நிராகரிக்க முடியாது. இதையே, இந்திய காங்கிரஸ் கட்சியும் எதிர்பார்க்கின்றது.
இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு இனக் கலவரம் நடைபெற்றால், அதற்கான பழியினைத் தமிழக மாணவர்கள் மீதும், பொறுப்பினை தமிழக அரசு மீதும் சுமத்தி விடுவதன் மூலம் தமிழக அரசியல் கள நிலைமையில் தமக்குச் சார்பான மாற்றத்தை உருவாக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகின்றது. அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளது.
மாணவர்களது அவசரமான, நிதானமற்ற போராட்டங்கள் மூலமாகவே இலங்கையில் தமிழ் மக்கள் பாதிப்பிற்குள்ளானார்கள் என்றும், தமிழக முதல்வரது பொறுப்பற்ற நடவடிக்கைகளினாலேயே தமிழர்கள் மீண்டும் இப்படியொரு அழிவினை எதிர்கொண்டார்கள் என்றும் குற்றம் சுமத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தன்னைச் சரி செய்ய நினைக்கின்றது.
இது குறித்து, அனைத்துத் தமிழர்களும் விழிப்பாக இருப்பதுடன், தமிழீழ மக்களை இன்னொரு இன அழிப்பிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியிலும் ஈடுபட வேண்டும் என்பதே தற்போதைய நிலையில் எமது அவசர வேண்டுகோளாக உள்ளது.
- இசைப்பிரியா
தமிழக தமிழீழத் தீர்மானம் மத்திய அரசினால் நிராகரிப்பு! இலங்கை, இந்திய நல்லுறவே காரணமாம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 12:31.55 AM GMT ]
இலங்கைக்கும் இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலான இராஜதந்திர ரீதியிலான உறவுகளில் எள்ளளவேனும் பாதிப்புகள் ஏற்படவில்லையென்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதில், தமிழ் ஈழம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கையை ‘நட்பு நாடு' என அழைக்கக்கூடாது என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கான தமிழீழத் தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்திருந்தார். இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இக்கருத்துக் குறித்து கேட்டபோதே, நீர்வழங்கல் வடிகாலமைப்புத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவுமான தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக வரலாற்று ரீதியான தொடர்புகள் காணப்படுகின்றன. நாம் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே இராஜதந்திர ரீதியிலான தொடர்புகளைப் பேணி வருகின்றோம்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் நீண்டகாலமானவை.
1961ம் ஆண்டு தமிழகத்தைத் தனிநாடாகப் பிரிப்பதற்கு சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், இதனை அப்போதைய இந்தியப் பிரதமர் முறியடித்திருந்தார்.
இருந்தபோதிலும் அவ்வாறான முயற்சிகள் மீண்டும் தமிழகத்தில் நிழலாடிக்கொண்டிருக்கின்றன.
அதேபோல, மத்திய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் நடவடிக்கைகளிலும் தமிழகத்திலுள்ள சில தரப்பினர் ஈடுபடுகின்றனர். மேலைத்தேய நாடுகளின் சூழ்சிகளினாலேயே இவ்வாறான நிலைமைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இதேவேளை, இலங்கையில் பிரிவினையை விரும்பியவர்களும் தற்பொழுது தமிழகத்தில் இருக்கின்றனர். இந்த இரண்டு தரப்பினரும் இணைந்தே நிலைமையை மோசமாக்கி வருகின்றனர்.
எனினும், இவ்வாறான முயற்சிகள் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் எள்ளளவேனும் பாதிப்பு ஏற்படாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten