தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 maart 2013

இன அழிப்பு என்றால் என்ன? பாகம்-9, (எச்சரிக்கை: சிறுவர்கள், மன வலிமை குன்றியவர்கள் இந்தக் காணெளியைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது)


யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் இன அழிப்பில் சுமார் 11 இலட்சம் குழந்தைகள் உட்பட 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.
வார்தைகளினால் வர்ணிக்க முடியாத அளவிற்கு யூத இனம் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட அந்த இனப்படுகொலை ஜேர்மனியிலும், ஜேர்மனி ஆக்கிரமித்த மற்றைய
தேசங்களிலும் நடந்தேறியிருந்தது.
கிட்லரின் இனப்படுகொலை பற்றி அறிந்துகொள்ளும் அனைவருக்கும் சாதாரணமாகவே எழுகின்ற கேள்விகள் இவை:
கிட்லர் எதற்காக யூதர்கள் அத்தனைபேரையும் அழிக்கவேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்தார்?
யூதர்கள் அத்தனைபேரையும் படுகொலைசெய்யும்படியான கிட்லரின் உத்தரவிற்குப் கட்டுப்படும் மனநிலை ஜேர்மனியர்களுக்கு எப்படி உருவானது?
ஜேர்மனியர்களால் ஒட்டுமொத்தமாக வெறுக்கப்படுவதற்கு யூதர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்திருந்தார்கள்?
யூதர்களுக்கு எதிராக ஜேர்மனியில் கிட்லரால் மேற்கொள்ளப்பட்ட அந்த இனப்படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன?
யூதர்களுக்கு எதிரான அந்த இனப்படுகொலை பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளுபவர்களைக்கூட ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் கேள்விகள் இவை.
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதற்கு முயல்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்

(உண்மையின் தரிசனம்)-நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch

http://news.lankasri.com/show-RUmryDRYNZlv4.html

Geen opmerkingen:

Een reactie posten