தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 maart 2013

இந்தச் சிங்களவர் யார் என்று தெரிகிறதா ?


இங்குள்ள புகைப்படத்தில் காணப்படும் நபரின் பெயர் நிஷாந்த கஜநாயக்க ஆகும். கொழும்பில் 2008 முதல் 2012 வரை நடைபெற்ற பல ஆட்கடத்தலில் இவரே நேரடியாகச் சம்மந்தப்பட்டுள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் நடைபெறும் ஆட்கடத்தல் சம்பவங்களோடு இவருக்கே நேரடித் தொடர்பு உள்ளது. இவர் கோட்டபாயவின் கீழ் இயங்குவதும் தற்போது ஆதாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இவர் கடத்தல் சம்பவத்தோடு தொடர்புடையவர் என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாக குற்றஞ்சாட்டியுள்ளார். நிஷாந்த கஜநாயக்க முன்னாள் விமானப்படை அதிகாரி ஆவார். இவர் விமானப்படை அதிகாரியாக இருந்தவேளையிலேயே கோட்டபாயவோடு மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணிவந்துள்ளார். பின்னர் அவர் அப்பதவியைத் துறந்து முழு நேர கடத்தல் காரராக மாறிவிட்டார்.

படு பயங்கரமான இலகுரக ஆயுதங்களை தாக்கிக்கொண்டு இவர் எடுத்துள்ள புகைப்படங்கள் வெளியானதில் இவர், எவ்வளவு தூரம் ஆட்கடத்தலில் ஈடுபட்டிருப்பார் என்பது புலனாகிறது என்று அச் சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. தமக்கு கீழ் அவர் நம்பிக்கையான சில சிங்கள இளைஞர்களை இணைத்துக்கொண்டு கோட்டபாயவின் அடியாளாக வேலைபார்த்துள்ளார். இவருக்கும் கோட்டபாயவுக்கும் தான் தொடர்பு இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து சில மணித்தியாலங்களில் நிஷாந்தவும் ரணில் விக்கிரமசிங்கவும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை எவரோ இணையம் வாயிலாக வெளியிட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். குறிப்பிட்ட இன் நபர் கோட்டபாயவுடன் மட்டுமல்ல, பல முக்கிய பிரபல்யங்களோடு நெருங்கிய தொடர்பை பேணிவந்துள்ளார் என்பதனை கிழ் காணும் புகைப்படங்களைப் பார்க்கும் போதே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

வட கிழக்கு மற்றும் கொழும்பில் காணமல் போன பல நூற்றுக்கணக்கானவர்களைக் கடத்திய ஆசாமி இவர்தான். இப்போதாவது இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனவே இனிவருங்காலங்களில் இவர் குறித்து மேலதிகச் செய்திகள் வெளியாகும் என்பதில் ஐயமில்லை.














http://athirvu.co.uk/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4754

Geen opmerkingen:

Een reactie posten