சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துமாறு இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடாக இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தும் திட்டத்தை முன்வைக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு இனத்தவருக்கும் தனித் தனி நிர்வாக அலகுகள் உருவாக்குது தொடர்பான மக்களின் விருப்பத்தை அறியும் வகையில் இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென குறித்த நாடுகள் கோரவுள்ளன.
இது தொடர்பான இணையத் தகவல்கள் தற்போது ராஜதந்திர ரீதியில் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த காலங்களில் தென் வட சூடான்கள் இவ்வாறே பிரிக்கப்பட்டது என குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten