தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 maart 2013

சிராணி பண்டாரநாயக்க விடயம் இலங்கை ஆபத்தான நாடு என்பதை காட்டுகிறது!- சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்


இலங்கையில் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமையானது, சட்டத்துக்கு புறம்பான செயலாகும். அத்துடன் சட்டத்தின் மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையை இது குறைக்கும் செயற்பாடு என்று சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக்குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணை மற்றும் அவர் நீக்கப்பட்ட விதம் என்பன, இலங்கை ஒரு ஆபத்தான நாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச சட்டத்தரணிகள் சங்க மனித உரிமைகள் நிறுவனத்தின் இணைத்தலைவர் Sternford Moyo இது தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளார்
இந்த சம்பவம் தொடர்பில் தமது நிறுவனம் விசாரணையை நடத்தமுயன்ற போதும் அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்றும் மோயா குற்றம் சுமத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten