தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

தமிழக சட்டப்பேரவை தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் வி.உருத்திரகுமாரன்


தமிழக சட்டப்பேரவை தீர்மானம் குறித்து பிரதமர் முடிவு எடுப்பார்: நாராயணசாமி
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 06:23.49 AM GMT ]
இலங்கைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக இந்திய பிரதமர் தகுந்த முடிவெடுப்பார் என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தூதர் கரியவாசம், தனது அதிகாரத்துக்கு உட்பட்டு பேச வேண்டும் எனவும் நாராயணசாமி வலியுறுத்தினார்.
தமிழக மாணவர்களின் முக்கிய கோரிக்கையான தமிழ் ஈழம் தொடர்பாக இந்தியா வறபுறுத்தினால், காஷ்மிரை தனியாகப் பிரித்துக் கொடுக்க பாகிஸ்தான் வலியுறுத்தினால் நிலைமை என்னவாகும் என நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
காஷ்மிரில் மனித உரிமை மீறப்பட்டதாக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா ஏற்றுக்கொள்ளுமா? எனவும் நாராயணசாமி வினவினார்.
நேற்று, இலங்கைக்கு எதிரான தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாக, சட்டப் பேரவையில் திமுக, இடதுசாரிகள் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.
அப்போது தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசினார்.
இலங்கையில் இறுதிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எவ்வித அடிப்படை வசதியுமின்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக ஜெயலலிதா தெரிவித்தார்.
இலங்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் ஜெயலலிதா குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக சட்டப்பேரவை தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 06:56.52 AM GMT ]
தமிழக முதல்வரால் முன்மொழியப்பட்ட தீர்மான வாக்கியங்கள் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசின் தமிழின விரோதப் போக்கையும் அனைத்துலகப் பொறிமுறை குறித்த புரிதலையும் நன்கு உள்வாங்கி தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த அரசியல் ஆவணமாகவும் அமைகிறது.
என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இது முதல்வர் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினையும் ஆளுமையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தகையதொரு சிறப்புமிகு தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக தமிழக முதல்வர் அவர்களை நாம் மனமுவந்து பாராட்டுகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் விவாகரத்தினை மையப்படுத்தி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து ஈழத்தமிழர் தேசத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே இத் தீர்மானம் செயல் வடிவம் பெறும். இத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசை ஏற்றுக் கொள்ளச் செய்யும் ஆற்றல் தமிழக மாணவர்களிடம் உள்ளது என்று நாம் கருதுகிறோம். இதற்கான செயற்பாடுகளை ஒரு திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் ஊடாகத் தமிழக மாணவர்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்பார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அறிக்கையின் முழுவிபரம்:
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களின் முன்னெடுப்பில் நேற்று வரலாற்றுச் சிறப்புபமிகு தீர்மானமொன்றை தமிழக சட்டமன்றப் பேரவை ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறது.
இத் தீர்மான வாக்கியங்கள் பின்வருமர்று பேசுகின்றன.
“இலங்கை நாட்டை 'நட்பு நாடு' என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,
இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை  நடத்திடவும்,
இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில்இ போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்,
தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்,
ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு 'தனி ஈழம்' குறித்து இலங்கைவாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”
இத்தகையதொரு உறுதியான தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தமிழக முதல்வர் செல்வி ஜெயலிலதா அவர்களுக்கும் ஏனைய கட்சித் தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஈழத் தமிழர் தேசத்தின் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பெருமகிழ்வையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானவாக்கியங்கள் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசின் தமிழின விரோதப் போக்ககயும் அனைத்துலகப் பொறிமுறை குறித்த புரிதலையும் நன்கு உள்வாங்கி தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த அரசியல் ஆவணமாகவும் அமைகிறது.
இது முதல்வர் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினையும் ஆளுமையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தகையதொரு சிறப்புமிகு தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக முதல்வர் அவர்களை நாம் மனமுவந்து பாராட்டுகிறோம்.
தமிழக சட்டப்மன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானத்துக்கு இந்திய மத்திய அரசு உரிய மதிப்பினை வழங்க வேண்டும் என நாம் கோருகிறோம். இத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசினைத் தூண்டுவதற்கான செயற்பாடுகளையும் தமிழக முதல்வர் தலைமையில் தமிழகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தோழமையுடன் கோருகிறோம்.
இத்தருணத்தில் தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான பேராட்டத்தீயை கனலச் செய்து வரும் தமிழக மாணவர்களின் கரங்களைத் தோழமையுணர்வுடன் பற்றிக் கொள்கிறோம்.
தமிழக சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே இத்தீர்மானம் செயல் வடிவம் பெறும்.
இத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசை ஏற்றுக் கொள்ளச் செய்யும் ஆற்றல் தமிழக மாணவர்களிடம் உள்ளது என்று நாம் கருதுகிறோம். இதற்கான செயற்பாடுகளை ஒரு திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் ஊடாகத் தமிழக மாணவர்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்பார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம என குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten