இதுகுறித்து முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறுகையில், “பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்படும் முன்பு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் போட்டோவில் ராணுச் சிப்பாய் ஒருவர் சீருடையில் இருப்பதுபோன்று காட்டப்பட்டுள்ளது. அது இலங்கை ராணுவ சிப்பாய்களுக்கு வழங்கப்படும் சீருடை அல்ல. இந்திய ராணுவத்தினர் அணிவது போன்று உள்ளது. விடுதலைப் புலிகள்தான் இறுதிக் கட்ட போரின்போது இந்திய ராணுவ வீரர்கள் போல் உடையணிந்திருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். (அப்படி என்றால் ஏன் விடுதலைப் புலிகள் இந்திய இராணுவச் சிப்பாய்கள் போல உடை அணியவேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா) அப்படி என்றால் களத்தில் இந்திய இராணுவத்தினர் நின்றிருக்கவேண்டும் என்பது உறுதியாகிறது. இதன் காரணமாக காடுகளில் தம்மை உருமறைப்புச் செய்யவே, புலிகள் இந்திய இராணுவத்தின் சீருடையை பாவித்திருக்கலாம். இது ஒரு புறம் இருக்க...
யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளின்பின் சரத் பொன்சேகா ஏன் இந்தியாவை காட்சிக்குள் இழுக்கிறார் ? அதாவது பாலச்சந்திரன் கொல்லப்பட்ட இடத்தில், நிச்சயம் இந்திய இராணுவத்தின் பிரசன்னம் இருந்திருக்கவேண்டும் என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. இலங்கை அதிகாரி இந்தியா தான் காரணம் என்பதும், இந்திய அதிகாரிகள் இலங்கை தான் காரணம் எனவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டும் நிலை தோன்றியுள்ளது. ஆனால் இவ்விரு நாடுகளும் இணைந்தே பல போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என்ற உண்மை மெல்ல மெல்ல வெளியாக ஆரம்பித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten