தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 maart 2013

நல்லிணக்க ஆணைக்குழுவின் எஞ்சிய பரிந்துரைகள் விரைவில் செயற்படுத்தப்படுத்தப்படும்! இலங்கை அரசாங்கம்


அமெரிக்க பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள காலக்கெடுவிற்கு இணங்க, நடைமுறைப்படுத்த வேண்டிய பரிந்துரைகள் விரைவில் செயற்படுத்தப்படுத்தப்படும் என்று இலங்கை அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர் கருணாதிலக அமுனுகம ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையான அமுலாக்க வலியுறுத்தி, அமெரிக்காவின் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அதன் பரிந்துரைகளில் அநேகமானவை ஏற்கனவே அமுலாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள பரிந்துரைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten