திருச்சி வந்த காங்கிரசு கட்சியின் தமிழ்மாநிலத் தலைவர் ஞானதேசிகனிற்கு கறுப்புகொடி காட்டி போராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது காங்கிரசு குண்டர்கள் நேற்று நடத்திய கொலைவெறித் தாக்குதலை அடுத்து திருச்சியில் பதற்றம் நிலவிவருகின்றது.
உறுட்டுக்கட்டைகள் மற்றும் அரிவாள்களுடன் கொலைவெறியுடன் பாய்ந்துவந்த காங்கிரசு குண்டர்கள் தமிழீழ விடுதலையை வலியுறுத்தி மாணவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களை திருச்சியில் முன்நின்று வழிநடத்திவரும் சட்டக்கல்லூரி மாணவர்களை இலக்குவைத்து தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார்கள்.
மாணவர்களது போராட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் அவங்களை கொல்லுங்கள் ஒருவனையும் உயிரோடு விடாதீர்கள் என காங்கிரசு கட்சியின் தமிழ்மாநிலத் தலைவர் ஞானதேசிகன் உத்தரவிட்டதையடுத்தே அங்கு கூடியிருந்த காங்கிரசு குண்டர்கள் கொலைவெறியுடன் பாய்ந்து வந்து மாணவர்களை தாக்கியுள்ளார்கள்.
இந்த கொலைவெறித்தாக்குதலில் சத்தியகுமாரன் முகம்மது ஜெப்ரி கஜேந்திரபாபு ஆகிய மாணவர்கள் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
மாணவர்கள் அறவழியில் தமது எதிர்ப்பை தெரிவித்த போது கொலைவெறியுடன் தாக்குதல் நடத்திய காங்கிரசு குண்டர்கள் மீது எதுவித நடவடிக்கையும் எடுக்காத தமிழக காவல்துறை மாணவர்கள் இருவரை கைதுசெய்து வழக்குபதிவுசெய்து தடுத்துவைத்துள்ளது. அவர்களிற்கு என்ன நடந்தது..? எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.
காங்கிரசின் கொலைவெறிக்கு துணைபோன காவல்துறையின் செயற்பாட்டை கண்டித்து நேற்று மாலை திருச்சி கண்டோன்மன்ட் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு முன்னர் தமிழீழ ஆதரவு அமைப்புகள் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியிருந்தார்கள்.
நீதி கேட்டு போராடிய ஐம்பதிற்கு மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு கே.கே.நகர் காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள திருமண மண்ணடபத்தில் தங்கவைக்கபட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்கள்.
மாணவர்கள் மீது காங்கிசார் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுவதால் திருச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை மற்றும் உளவுத்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாணவர்கள் தமிழீழ ஆதரவாளர்கள் தனித்தனியே ஏதாவது போராட்டங்களில் ஈடுபடலாம் என எதிர்பார்ப்பதால் உலங்குவானூர்தி வரவழைக்கப்பட்டு திருச்சி நகரம் முழுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை முதல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான உலங்குவானூர்தி தொடர் பறப்பில் ஈடுபட்டு திருச்சி நகரத்தை கண்காணித்துவருகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten